நேபால் நிலநடுக்கம்.. 128ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை.. இந்தியா உங்களோடு நிற்கிறது - பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல்!

Prime Minister Modi : நேபாளத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் குறித்து தாம் மிகுந்த வருத்தமடைவதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று சனிக்கிழமை வெளியிட்ட ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.

Nepal Earthquake killed 128 people Indian PM Narendra Modi says India Stand with Nepal ans

நேற்று வெள்ளிக்கிழமை இரவ, நேபாளத்தின் தொலைதூரப் பகுதியில் ஏற்பட்ட சுமார் 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திற்குப் பிறகு, இன்று காலை 5 மணி நிலவரப்படி 70 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்பட்ட நிலையில் தற்போது குறைந்தது 128 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் பாரத பிரதமர் மோடி, நேபாள மக்களுடன் இந்தியா துணையாக உள்ளது என்று கூறியுள்ளார். 

"நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சேதங்களுக்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கின்றேன். இந்தியா நேபாள மக்களுடன் ஒற்றுமையாக நிற்கிறது மற்றும் சாத்தியமான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளது. எங்கள் ஆறுதல்கள் இறந்தவர்களின் குடும்பங்களுடன் உள்ளன, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறோம், என்றார் அவர்.

அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற 97,000 இந்தியர்கள் கைது!

நேபாளத்தில் நிலநடுக்கம் 6.4 ரிக்டர் அளவில் வெள்ளியன்று 18.02 GMT அளவில் ஏற்பட்டதாக அந்நாட்டின் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் தாக்கம் டெல்லி, உத்தரபிரதேசம் மற்றும் பீகாரிலும் உணரப்பட்டது. ஜாஜர்கோட்டின் மையப்பகுதிக்கு அருகிலுள்ள மலைப்பாங்கான பகுதியில் அவர்களால் தொடர்பை ஏற்படுத்த முடியவில்லை என்பதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்று அதிகாரிகள் அஞ்சியுள்ளனர்.

நேபாள நிலநடுக்கம்.. 70 பேர் பலி.. இறப்பு எண்ணிக்கை அதிகரிக்க அதிக வாய்ப்பு - துவங்கிய மீட்பு பணிகள்

ஜஜர்கோட்டில் குறைந்தது 92 பேர் கொல்லப்பட்டனர் என்றும், கர்னாலி மாகாணத்தில் உள்ள ருக்கும் மேற்கு மாவட்டத்தில் 36 பேர் இறந்தனர் என்றும், அதேபோல ஜஜர்கோட்டில் குறைந்தது 55 பேர் காயமடைந்தனர் என்றும், ருக்கும் மேற்கில் 85 பேர் காயமடைந்தனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால், தேடுதல், மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்பார்வையிட 16 பேர் கொண்ட ராணுவ மருத்துவக் குழுவுடன் சனிக்கிழமை அதிகாலை அப்பகுதிக்கு சென்றார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios