Asianet News TamilAsianet News Tamil

Breaking : நேபாள நிலநடுக்கம்.. 70 பேர் பலி.. இறப்பு எண்ணிக்கை அதிகரிக்க அதிக வாய்ப்பு - துவங்கிய மீட்பு பணிகள்

Nepal Earthquake : நேபாளத்தில் நேற்று நள்ளிரவில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது, இது டெல்லி-என்சிஆர், பீகார் ஆகிய இடங்களில் உணரப்பட்டது. இதனையடுத்து நேபாளில் நிலநடுக்கம் காரணமாக 70 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

massive earthquake in nepal 70 people got killed officials says death may increase ans
Author
First Published Nov 4, 2023, 6:53 AM IST | Last Updated Nov 4, 2023, 7:04 AM IST

நேற்று வெள்ளிக்கிழமை இரவு சுமார் 11.47 மணியளவில் வலுவான நிலநடுக்கம் டெல்லி-NCR ஐத் தாக்கியது. ஆனால் அப்போது உள்ளூர் அதிகாரிகளுக்கு இறப்பு மற்றும் காயமடைந்தவர்கள் பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை. இரவு நேரத்தில் ஏற்பட்ட 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் இப்பொது பெரும் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. 

நேபாளத்தின் தொலைதூரப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகுதியில் ஏற்பட்ட 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் சுமார் 70 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிகாரிகளின் கூற்றுப்படி, இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இரவு நேரத்தில் நடந்த இந்த கோர சம்பவத்தில் கட்டிடங்களின் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை தேடும் பணி துவங்கியுள்ளது.

குழந்தை ராமர் சிலையை சுமந்து செல்லும் பிரதமர் மோடி: கருவறையில் வைக்கப்படும் சிலை எது?

இந்த பயங்கர நிலநடுக்கத்தில் பல வீடுகள் இடிந்து விழுந்தன மற்றும் கடுமையான சேதம் அடைந்துள்ளன. உயிர் பிழைத்தவர்கள் பயத்தில் வெளியே பதுங்கியிருந்தனர், அவசரகால சைரன்களின் அலறலால் சூழப்பட்டனர். நிலநடுக்கத்தின் அதிர்வுகள் கிட்டத்தட்ட 500 கிலோமீட்டர் தொலைவில் உள்ள புதுடெல்லி வரை உணரப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

ருக்குமில் மேற்கு பகுதியில் குறைந்தது 36 பேரும், ஜாஜர்கோட்டில் குறைந்தது 34 பேரும் இறந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். "ருகும் மேற்கில் குறைந்தது 36 பேர் இறந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது, மேலும் இந்த எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது. இது காலை 5 மணி வரை (உள்ளூர் நேரம்) எங்களால் பெற முடிந்த தகவல்" என்று ருகுமின் தலைமை மாவட்ட அதிகாரி ஹரி பிரசாத் பந்த் கூறினார். 

இந்தியாவின் உணவுப் பன்முகத்தன்மை: பிரதமர் மோடி பெருமிதம்!

நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பயங்கரமான உயிர் சேதம் மற்றும் கடுமையான உள்கட்டமைப்பு சேதங்களுக்கு இரங்கல் தெரிவித்தார். "மாண்புமிகு பிரதமர் புஷ்ப கமல் தஹால் "பிரசாந்தா" வெள்ளிக்கிழமை இரவு 11:47 மணிக்கு ஜாஜர்கோட்டில் உள்ள ராமிதாண்டாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட மனித உயிர்கள் மற்றும் பொருள் சேதங்களுக்கு தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்தார், மேலும் உடனடியாக மீட்பு மற்றும் நிவாரணத்திற்காக 3 பாதுகாப்பு நிறுவனங்களையும் முடுக்கிவிட்டுள்ளார். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios