கொலைவெறியின் மொத்த உருவம்... 17 நோயாளிகளைச் சாகடித்த நர்ஸுக்கு 700 ஆண்டுகள் சிறை தண்டனை!

22 நோயாளிகளுக்கு அதிக அளவு இன்சுலின் வழங்கியதாக பிரஸ்டீ மீது குற்றம் சாட்டப்பட்டது. நீரிழிவு நோய் இல்லாதவர்ளுக்கும் இன்சுலினை அதிகமாக செலுத்தியுள்ளார். பெரும்பாலான நோயாளிகள் அதிகமான இன்சுலின் செலுத்தப்பட்ட உடனேயே அல்லது சிறிது நேரத்திலேயே இறந்தார்கள்.

Evil Personified: Nurse Who Killed 17 Patients Jailed For Over 700 Years sgb

மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பல நோயாளிகளுக்கு இன்சுலின் மருந்தை அளவுக்கு அதிகமாக செலுத்திய அமெரிக்க செவிலியருக்கு சனிக்கிழமை 380-760 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

2020 முதல் 2023 வரை ஐந்து சுகாதார நிலையங்களில் குறைந்தது 17 நோயாளிகள் இறந்ததற்கு இவர் பொறுப்பு என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

பென்சில்வேனியாவில் உள்ள 41 வயதான செவிலியர் ஹீதர் பிரஸ்டீ, மூன்று கொலைக் குற்றச்சாட்டுகள் மற்றும் 19 கொலை முயற்சி வழக்குகளில் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

22 நோயாளிகளுக்கு அதிக அளவு இன்சுலின் வழங்கியதாக பிரஸ்டீ மீது குற்றம் சாட்டப்பட்டது. நீரிழிவு நோய் இல்லாதவர்ளுக்கும் இன்சுலினை அதிகமாக செலுத்தியுள்ளார். பெரும்பாலான நோயாளிகள் அதிகமான இன்சுலின் செலுத்தப்பட்ட உடனேயே அல்லது சிறிது நேரத்திலேயே இறந்தார்கள். பாதிக்கப்பட்ட அனைவரும் 43 முதல் 104 வயது வரை உள்ளவர்கள்.

இன்சுலினை அதிகப்படியாக செலுத்துவது ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவதற்கு வழிவகுக்கும். இதயத் துடிப்பை அதிகரித்து மாரடைப்புக்கு வழிவகுக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பஞ்சாப் குருத்வாராவில் சீக்கிய புனித நூலைக் கிழித்தாக மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் படுகொலை!

கடந்த ஆண்டு மே மாதம் இரண்டு நோயாளிகளைக் கொன்றதற்காக பிரஸ்டீ மீது முதல் குற்றச்சாட்டு பதிவானது. அதைத் தொடர்ந்து போலீஸ் நடத்திய விசாரணையில் அவர் இன்னும் பலரைக் கொன்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

நோயாளிகளிடம் அவரது நடத்தை சரியாக இல்லை என்று பிரஸ்டீ பற்றி அவரது சக பணியாளர்கள் புகார் கூறியுள்ளனர். அவர் நோயாளிகள் மீது வெறுப்பைக் காட்டுவதாகவும், நோயாளிகள் பற்றி அடிக்கடி இழிவாகப் பேசுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

அவர் தனது அம்மாவுக்கு அனுப்பிய குறுஞ்செய்திகளிலும், தான் சந்திக்கும் சக பணியாளர்கள் உள்ளிட்டவர்களிடம் நோயாளிகளுக்கு தீங்கு செய்ய விரும்புவதைப் பற்றி பேசியிருக்கிறார் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பிரஸ்டீ 2018 முதல் 2023 வரை முதியோர் இல்லங்களில் பல வேலைகளில் பணியாற்றினார். நோயாளிகளைக் கொன்றதற்காக தண்டிக்கப்பட்டது பிரஸ்டீ மட்டுமல்ல. பல சுகாதாரப் பணியாளர்கள் இதுபோன்ற குற்றங்களுக்காகத் தண்டனை பெற்றுள்ளனர்.

சார்லஸ் கல்லன் என்பவர் நியூ ஜெர்சி மற்றும் பென்சில்வேனியாவில் உள்ள நர்சிங் ஹோம்களில் குறைந்தது 29 நோயாளிகளைக் கொன்றார். டெக்சாஸ் செவிலியர் வில்லியம் டேவிஸ் இதய அறுவை சிகிச்சை செய்துகொண்ட நான்கு நோயாளிகளுக்கு தமனிகளில் காற்றை செலுத்திக் கொன்றார்.

பூவால் பலியான கேரள இளம்பெண்! மொபைலில் பேசிக்கொண்டிருந்த போது நடந்த விபரீதம்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios