பஞ்சாப் குருத்வாராவில் சீக்கிய புனித நூலைக் கிழித்தாக மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் படுகொலை!
சமூக வலைத்தளத்தில் வெளியான ஒரு வீடியோவில், பக்ஷிஷ் கைகள் கட்டப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் அமர்ந்திருப்பதையும் ஒரு குழு அவரைச் சுற்றி வளைத்துத் தாக்குவதையும் காணமுடிகிறது.
பஞ்சாபின் பெரோஸ்பூரில் உள்ள குருத்வாராவில் சீக்கியர்களின் புனித நூலான குரு கிரந்த சாஹிப்பின் சில பக்கங்களை கிழித்ததாகக் கூறி 19 வயது இளைஞர் ஒருவர் சனிக்கிழமை அடித்துக் கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பண்டாலா கிராமத்தில் உள்ள பாபா பிர் சிங் குருத்வாராவில் பக்ஷிஷ் சிங் என்ற இளைஞர் புனித நூலைக் கிழித்தாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் அவரைப் பிடித்துத் தாக்கிப் படுகொலை செய்துள்ளனர் என காவல்துறையிடர் கூறுகின்றனர்.
மனநலம் பாதிக்கப்பட்ட பக்ஷிஷ் இரண்டு ஆண்டுகளாக அதற்காகங மருந்து உட்கொண்டு வந்தார் என அவரது தந்தை லக்விந்தர் சிங் சொல்கிறார். தனது மகனைக் கொன்றவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறையிடரிடம் புகார் கூறியுள்ளார். அதன்படி, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்தியாவைச் சீண்டும் நேபாளம்... புதிய 100 ரூபாய் நோட்டில் இந்தியப் பகுதிகளின் வரைபடம்!
பக்சிஷ் இதற்கு முன் குருத்வாராவிற்கு சென்றதே இல்லை என்றும் உள்ளூர்வாசிகள் கூறுகிறார்கள். புனித நூலைக் கிழித்துவிட்டு குருத்வாராவில் இருந்து ஓடிச் சென்ற அவரை அப்பகுதி மக்கள் பிடித்துள்ளனர். இந்தச் சம்பவம் பற்றிய தகவல் பரவியதையடுத்து, கிராம மக்கள் குருத்வாராவில் திரண்டு அவரை அடித்து உதைத்தனர்.
சமூக வலைத்தளத்தில் வெளியான ஒரு வீடியோவில், பக்ஷிஷ் கைகள் கட்டப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் அமர்ந்திருப்பதையும் ஒரு குழு அவரைச் சுற்றி வளைத்துத் தாக்குவதையும் காணமுடிகிறது. படுகாயம் அடைந்த அவரை போலீசார் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், ஆனால் அதற்குள் அவர் உயிரிழந்தார்.
படுகொலை சம்பவங்களைத் தடுப்பதில் சட்டம் தோல்வி அடைந்துவிட்டது என்றும், குற்றவாளிகளைத் தண்டிக்கத் தவறியதன் விளைவாகவே பக்சிஷின் மரணம் என்றும் அகல் தக்த் ஜதேதார் கியானி ரக்பீர் சிங் விமர்சித்துள்ளார்.
நிலத்தின் உரிமையாளர் யார்? கூகுள் மேப் மூலம் ஈசியா கண்டுபிடிக்கலாம்! அவசியம் தெரிஞ்சுக்கோங்க!