ஆப்ரேஷன் தியேட்டரில் டாக்டர் போடும் ஆட்டம்...! அலட்சியமான நடவடிக்கையால் 100 பெண்கள் பாதிப்பு...!

During surgery the doctor dance
During surgery, the doctor dance


மருத்துவமனையின் அறுவை சிகிச்சை மையத்தில், பெண் டாக்டர் ஒருவர் நோயாளிக்கு ஆடிக் கொண்டே அறுவை சிகிச்சை செய்த சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. டாக்டரின் அலட்சியமான நடவடிக்கை காரணமாக பாதிக்கப்பட்டதாக 100 பெண்கள் புகார் கூறியுள்ளனர்.

அமெரிக்காவின் அட்லாண்டாவைச் சேர்ந்த பெண் டாக்டர் விண்டெல் பூட்டே. இவர் தோல் நோய் மற்றும் முக அழகு சிறப்பு சிகிச்சை நிபுணராக இருந்து
வருகிறார். நோயாளிகளுக்கு ஆப்ரேசன் தியேட்டரில் அறுவை சிகிச்சை செய்யும்போது, மியூசிக் போட்டு ஆடிப்பாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இது தொடர்பான வீடியோக்களும், சமூக வலைத்தளங்களில் உலா வருகின்றன.

அந்த வீடியோக்க்ளில், அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் நோயாளி மயக்க நிலையில் இருக்க, அருகில் டாக்டர் விண்டெல் பூட்டே நடனமாடுகிறார். அவருடன் இருக்கும் உதவியாளர்களும் சேர்ந்து ஆடிப்பாடி மகிழ்கின்றனர்.

டாக்டர் விண்டெல் பூட்டேவிடம் அறுவை சிகிச்சை செய்து கொண்ட முன்னாள் நோயாளிகள் பலர் இந்த வீடியோக்களைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஏற்பட்ட உடல் உபாதைகள் மற்றும் பிரச்சனைகள் ஏற்படுவதற்கு டாக்டரின் அலட்சியமான நடவடிக்கை காரணமாக இருக்கலாம்
என்று அவர்கள் கருதினார். இது தொடர்பாக சுமார் 100 பேர் போலீசில் புகாரும் கொடுத்துள்ளனர்.

மேலும், சிலர் டாக்டர் விண்டெலுக்கு எதிராக சில பெண்கள் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்துள்ளனர். டாக்டர் விண்டெலிடம் சிகிச்சை பெற்ற பிறகு
நோய்த்தாக்கம் தொற்றுநோய்கள் மற்றும் மூளை பாதிப்புகள் ஏற்பட்டதாக அவர்கள் மனுவில் கூறியுள்ளனர்.  இது தொடர்பாக டாக்டர் விண்டெலோ,
மருத்துவமனை நிர்வாகமே எந்தவித விளக்கத்தையும் இதுவரை அளிக்கவில்லை.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios