டிரம்ப்-புடின் சந்திப்பு: உக்ரைன் போர் முடிவுக்கு வருகிறதா?

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்திக்க டொனால்ட் டிரம்ப் திட்டமிட்டுள்ளார். உக்ரைன் போரை விரைவில் முடிவுக்கு கொண்டுவர முடியும் என்று ட்ரம்ப் கருதுகிறார். ஆனால், எந்த காலக்கெடுவும் இல்லை என்று மார்கோ ரூபியோ கூறுகிறார்.

Donald Trump Plans to meet Putin to End Ukraine War says Marco Rubio

World News: அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார். இதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே நடைபெற்று வருவதாகவும், உக்ரைன் போர் குறித்து புடினுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாகவும், போரை விரைவில் முடிவுக்குக் கொண்டுவர விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

அதிபர் தேர்தலின்போது, 24 மணி நேரத்திற்குள் உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர முடியும் என்று டிரம்ப் கூறியிருந்தார். தற்போது, "உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் ஒரு போதும் தொடங்கியிருக்கக்கூடாது. இதை விரைவில் முடிக்க நாங்கள் முயற்சிப்போம்" என்று அவர் கூறினார்.

WHO மற்றும் பாரீஸ் ஒப்பந்தத்தில் வெளியேறியது அமெரிக்கா; சீனாவுக்கு நெருக்கடி கொடுக்கும் டிரம்ப்!!

போர் முடிவுக்குக் காலக்கெடு இல்லை: மார்கோ ரூபியோ

ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான எந்தக் காலக்கெடுவும் இல்லை என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மார்கோ ரூபியோ திங்களன்று கூறினார். எந்தவொரு மோதலைத் தீர்க்கவும் ஒவ்வொரு தரப்பும் "சில"வற்றை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார். ரஷ்யாவை "ஆக்கிரமிப்பு" என்று கூறிய ரூபியோ, ரஷ்யா-உக்ரைன் போர் "முடிவுக்கு வர வேண்டும்" என்றும், ஒவ்வொரு தரப்பும் "சிலவற்றை விட்டுக்கொடுக்க வேண்டும்" என்றும் கூறினார்.

"போர் முடிவுக்கு வர வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். இது மிகத் தெளிவானது. அதிபர் இது குறித்துப் பேசியதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அவர் அமைதியை நிலைநாட்டவும் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரவும் விரும்புகிறார். இவை சிக்கலான விஷயங்கள். இதற்கு நான் எந்தக் காலக்கெடுவும் விதிக்க முடியாது. இரண்டு தரப்பினருக்கும் இடையேயான மோதலை முடிவுக்குக் கொண்டு வரும்போது, ஒவ்வொரு தரப்பும் சிலவற்றை விட்டுக்கொடுக்க வேண்டும்," என்று அவர் கூறினார்.

உக்ரைனுக்கு அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் பெரும் ராணுவ மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கி வருகின்றன. இதன் மூலம் உக்ரைன் ரஷ்யப் படையை எதிர்த்துப் போரிடுகிறது. இந்தப் போரின் காரணமாக ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.

வெள்ளை மாளிகையைப் புறக்கணிக்கும் டிரம்ப் மகன் பரோன்! ஏன் தெரியுமா?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios