வெள்ளை மாளிகையைப் புறக்கணிக்கும் டிரம்ப் மகன் பரோன்! ஏன் தெரியுமா?
Barron Trump in the White House: டொனால்ட் டிரம்ப் - மெலனியா டிரம்ப் ஆகியோரின் டீனேஜ் மகனான பரோன் டிரம்ப், தனது தந்தையின் இரண்டாவது அமெரிக்க அதிபராக இருக்கும்போது வெள்ளை மாளிகையில் வசிக்க மாட்டார். அது ஏன் என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.
Barron Trump
அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டிரம்ப்பின் இளம் வாரிசான பரோன் டிரம்ப் தனது பெற்றோருடன் வாஷிங்டன் டிசியில் உள்ள வெள்ளை மாளிகையில் வசிக்கப்போவது இல்லை. அவர் தொடர்ந்து நியூயார்க்கிலேயே வசிக்க இருக்கிறார். அவர் இப்போது அங்குள்ள கல்லூரியில் சேர்ந்திருப்பதுதான் முக்கியக் காரணம்.
Barron Trump
18 வயதான பரோன் டிரம்ப் நியூயார்க் பல்கலைக்கழகத்தின் ஸ்டெர்ன் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் கடந்த செப்டம்பரில் முதலாம் ஆண்டு படிப்பைத் தொடங்கியுள்ளார். இருந்தாலும், பரோனுக்கு வெள்ளை மாளிகையில் ஒரு அறை இருக்கும் என்று அவரது தாய் மெலானியா ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
Barron Trump
பரோன் டிரம்ப் அவ்வப்போது தனது நண்பர்களுடன் வந்து பார்க்க முடியும் என்றும் மெலானியா கூறினார். இருந்தாலும் பரோன் அடிக்கடி வெள்ளை மாளிகைக்கு வருகிறாரா என்பது அவரைப் பொறுத்தது என்றும் அவர் கூறினார்.
Donald trump Son Barron Trump
"குழந்தைகள், அவர்கள் 18, 19 வயது வரை எங்களிடம் இருக்கிறார்கள் என்று நான் உணர்கிறேன். நாங்கள் அவர்களுக்கு கற்பிக்கிறோம், அவர்களுக்கு வழிகாட்டுகிறோம், பின்னர் அவர்கள் பறக்க இறக்கைகளைக் கொடுத்துவிடுகிறோம்" என்று மெலானியா சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.
"என்ன செய்ய விரும்புகிறார், எங்கு இருக்க விரும்புகிறார் என்பது பரோனின் முடிவுதான். நான் எப்போதும் அந்த முடிவுகளை மதிக்கிறேன்" என்றும் தெரிவித்துள்ளார்.
Donald trump Son Barron Trump
2016ஆம் ஆண்டில் டொனால்ட் டிரம்ப் முதன்முதலில் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது 10 வயதில், பரோன் தனது தந்தையுடன் வெள்ளை மாளிகையில் வசித்து வந்தார். ஆனால் அப்போதும் டிரம்ப் பதவியேற்ற கொஞ்ச காலத்திற்கு பள்ளிப் படிப்பில் ஓர் ஆண்டை முடிக்க நியூயார்க்கில் தங்கி இருந்தார்.
Donald trump Son Barron Trump
மெலனியா டிரம்ப் பதவியேற்புக்குப் பிறகு நியூயார்க், வாஷிங்டன் மற்றும் புளோரிடாவில் ஆகிய மூன்று நகரங்களிலும் மாறிமாறி வசிக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளார். "நான் வெள்ளை மாளிகையில் இருப்பேன், நியூயார்க்கில் இருக்க வேண்டியிருக்கும்போது, நியூயார்க்கில் இருப்பேன்" என்று அவர் கூறினார்.