சீனாக்காரனுக்கு அழிவுகாலம் வந்துடுச்சு...!! தேவாலயங்களை அடித்து உடைத்து அட்டராசிட்டி..!!

கடந்த சில மாதங்களாக தேவாலயங்களின் மீது சர்வாதிகாரத்தை கட்டவிழித்துவிட்ட சீன அரசு, தற்போது கிறிஸ்தவர்களின் வீடுகளையும்  குறி வைத்துள்ளது. வீடுகளிலிருந்து உடனே இயேசு கிறிஸ்துவின் புகைப்படம் மற்றும் சிலுவைகளை அகற்ற வேண்டுமெனவும் எச்சரித்துள்ளது

Destruction for the Chinese , Atrocities smash churches

உய்குர் முஸ்லிம்களுக்கு எதிராக சீனா அரச பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டு அம்மக்களை வதை முகாம்களில் அடைத்து கொடுமைப்படுத்தி வரும் நிலையில், தற்போது அந்நாட்டிலுள்ள கிறிஸ்தவர்களின் மீதும் அந்த அதிகார துஷ்பிரயோகம் பாயத் தொடங்கியுள்ளது. கிட்டத்தட்ட 70 லட்சம் கிறிஸ்தவர்கள் சீனாவில் வசித்து வரும் நிலையில்  அவர்களின் வீடுகளில் உள்ள இயேசுகிறிஸ்துவின் புகைப்படங்களை அகற்றிவிட்டு, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் மாவோ மற்றும் சீனா அதிபர் ஜீ ஜின்பிங் ஆகியோரின் புகைப்படங்களை வைக்குமாறு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.  சீனாவின் இந்த எதேச்சதிகார உத்தரவு அந்நாட்டில் வசித்து வரும் கிறிஸ்தவ மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், இந்த வைரசிலிருந்து தப்பிக்க உலகமே போராடி வருகிறது. ஆனால் சீனாவோ தனது  அண்டை நாடுகளின் எல்லைப் பகுதிகளை ஆக்கிரமிப்பது, தனது ராணுவ வலிமையைப் பயன்படுத்தி அண்டை நாடுகளை அச்சுறுத்துவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. 

Destruction for the Chinese , Atrocities smash churches

ஒரு சில நாடுகளைத் தவிற ஒட்டுமொத்த சர்வதேச நாடுகளும் சீனாவின் எதேச்சதிகாரத்தை எச்சரித்து வரும் நிலையில், உய்குர் முஸ்லிம் மக்கள் மீதான அடக்குமுறை தற்போது பூதாகரமாகி உள்ளது. அந்த பிரச்சினை ஓய்வதற்குள், கிறிஸ்தவர்கள்  மீதான பிரச்சனை பரபரப்பாகி வருகிறது. அதாவது, சீன அரசு அந்நாட்டில் உள்ள கிறிஸ்தவர்களுக்கு எதிராக தனது அடக்குமுறையை ஏவத்தொடங்கியுள்ளது. அந்நாட்டில் வசித்துவரும் கிறிஸ்துவர்கள் தங்களது வீடுகளில் உள்ள இயேசுகிறிஸ்துவின் புகைப்படங்களை அகற்றிவிட்டு, அதிபர் ஜீ ஜின்பிங் மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் மாவோ ஆகியோரின் புகைப்படங்களை வைக்க வேண்டும் என  அரசு உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

Destruction for the Chinese , Atrocities smash churches

புஜியான் மாகாணத்தில் பல தேவாலயங்கள் ஜின்பிங் அரசாங்கத்தால் இடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இப்போது கிறிஸ்தவ சமூகத்தினர் இயேசு கிறிஸ்துவின் புகைப்படங்களை தங்கள் வீடுகளில் இருந்து உடனே அகற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாக செய்தி வந்துள்ளது.அதற்கான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் பரவி வைரலாகி வருகிறது. சீனா பிறப்பித்துள்ள சர்வாதிகார ஆணைகள் மூலம் நான்கு மாநிலங்களில் உள்ள தேவாலயங்களுக்கு வெளியே உள்ள மத அடையாளங்கள் அகற்றப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான தேவாலயங்களுக்கு வெளியே நிறுவப்பட்ட மத அடையாளங்கள் அகற்றப்பட்டுள்ளன. நாட்டில் கிட்டத்தட்ட 70 லட்சம் கிறிஸ்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர். சீனாவின் இந்த புதிய நடவடிக்கை  ரேடியோ ஃப்ரீ ஆசியா வெளியிட்ட செய்தியின் மூலம் உலகிற்கு தெரிய வந்துள்ளது . அதன்படி, அன்ஷுய், ஜியாங்சு, ஹெபாய் மற்றும் ஜெஜியாங் ஆகிய பகுதிகளில் உள்ள தேவாலயங்களுக்கு வெளியே சமீபத்தில் வைக்கப்பட்டிருந்த மத சின்னங்கள் உடைக்கப்பட்டன அல்லது அகற்றப்பட்டன என அந்த செய்தி தெரிவித்துள்ளது. 

Destruction for the Chinese , Atrocities smash churches

கடந்த சில மாதங்களாக தேவாலயங்களின் மீது சர்வாதிகாரத்தை கட்டவிழித்துவிட்ட சீன அரசு, தற்போது கிறிஸ்தவர்களின் வீடுகளையும்  குறி வைத்துள்ளது. வீடுகளிலிருந்து உடனே இயேசு கிறிஸ்துவின் புகைப்படம் மற்றும் சிலுவைகளை அகற்ற வேண்டுமெனவும் எச்சரித்துள்ளது. கடந்த சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஹுவானன் மாகாணத்தில் தேவாலயங்களுக்கு வெளியே இருந்த சிலுவைகள் உடைக்கப்பட்டது. அங்கு வந்த அதிகாரிகள் சிலுவைகளை உடனே அகற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர், ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து திரண்ட பொதுமக்கள் அரசுக்கு எதிராக குரல் எழுப்பினர். ஆனால் போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தி போராட்டத்தை கலைத்தனர். பின்னர் போலீசாரும் அரசு ஊழியர்களும் இணைந்து சிலுவைகளை அகற்றினர். ஜூலை 7 அன்று ஜெஜியாங்கிலும்  இதே சம்பவம்தான் நடைபெற்றது. இதற்கான பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். ஜி ஜின்பிங் அரசாங்கம் கடந்த ஆண்டு மத புத்தகங்களுக்கு தடை செய்து உத்தரவு பிறப்பித்தது, உத்தரவுகளை மீறுபவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்று அச்சுறுத்திய நிலையில் தேவாலயங்களை சேதப்படுத்திகிருஸ்தவர்களை ஒடுக்கி வருவது சர்வதேச அளவில் கண்டனத்தை எழுப்பியுள்ளது. 
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios