பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை (ஜூன் 22) வெள்ளை மாளிகையில் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு, இந்தியா ஜனநாயக நாடு என்று அழுத்தம் திருத்தமாக தெரிவித்தார்.   

செய்தியாளர் சந்திப்பில் பேசிய பிரதமர் மோடி, "அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குறிப்பிட்டது போல், இந்தியா மற்றும் அமெரிக்காவின் ஜனநாயகம் எங்களது டிஎன்ஏவில் உள்ளது. பாகுபாடு என்ற பேச்சுக்கே இடமில்லை. எங்கள் அரசாங்கம் அரசியலமைப்பின் அடிப்படைக் கொள்கைகளில் செயல்படுகிறது. 

"பாகுபாடுகளுக்கு முற்றிலும் இடமில்லை. மனிதநேயமும் இல்லை என்றால் அது ஜனநாயகம் அல்ல. ஜனநாயகத்தை ஏற்கும்போது பாகுபாடுகளுக்கு இடமில்லை. ஒன்றாகச் செயல்படுவோம். இந்தியாவில் அரசு வழங்கும் சலுகைகள். அனைவருக்கும் கிடைக்கும். 

எழுந்து நின்று கை தட்டிய அமெரிக்க எம்பிக்கள்.. ஆட்டோகிராஃப் டூ செல்ஃபி வரை..கெத்து காட்டிய பிரதமர் மோடி

"இந்தியாவின் ஜனநாயகத்தில் வயது, ஜாதி அல்லது மதத்தின் அடிப்படையில் எந்த பாகுபாடும் இல்லை. 
நாங்கள் எடுத்த முக்கிய முடிவுகள் உலகளாவிய கூட்டாண்மைக்கு ஒரு புதிய அத்தியாயத்தை சேர்த்துள்ளன. இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டு கூட்டாண்மை உலகப் பொருளாதாரத்திற்கு அவசியம். 

President Biden and Prime Minister Modi of India Deliver Remarks and Take Questions from the Press

"விண்வெளி, AI மற்றும் செமிகண்டக்டர்கள் ஆகியவற்றில் எங்களது ஒத்துழைப்பை அதிகரிப்பதன் மூலம் நாங்கள் ஒரு எதிர்கால கூட்டாண்மையை உருவாக்குகிறோம். மேலும் சில அமெரிக்க தலைமை நிர்வாக அதிகாரிகளையும் சந்தித்தேன். எஅப்போது அவர்களது இந்தியாவைப் பற்றிய நேர்மறையான கண்ணோட்டத்தை உணர முடிந்தது. எரிசக்தி ஆற்றல் மாற்றத்தை அடைவதற்காக. , நாங்கள் பல முயற்சிகளை எடுத்தோம். கிரீன் ஹைட்ரஜன் போன்றவற்றை உள்ளடக்கியது'' என்றார்.

Scroll to load tweet…

PM Modi: இந்தியா வளர்ந்தால் உலகம் வளரும்.! அதுமட்டுமா.!! அமெரிக்க நாடாளுமன்றத்தை அதிர வைத்த பிரதமர் மோடி

வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் இருவருக்கு கேள்வி கேட்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. அவர்களில் ஒருவர் வால் ஸ்டிரீட் ஜர்னல் சப்ரினா சித்திக்ஆவார்.

மூன்று நாட்கள் அரசு முறைப் பயணம் மேற்கொண்டு இருக்கும் இந்தியப் பிரதமர் மோடியை வரவேற்று, அவருக்கு விருந்தளிதடு இருப்பது கவுரவம்'' என்றார். இருதரப்பு பேச்சுவார்த்தையின் போது மனித உரிமைகள் விவகாரம் குறித்து பிரதமர் மோடியுடன் பேசுவேன் என்றும் அமெரிக்க அதிபர் கூறினார்.

வெள்ளை மாளிகையின் கதவுகள் இந்திய-அமெரிக்கர்களுக்காக அதிக எண்ணிக்கையில் திறக்கப்படுவது இதுவே முதல் முறை என்று என்று பெருமிதத்துடன் மோடி கூறினார். 

"சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, நான் ஒரு சாதாரண மனிதனாக அமெரிக்காவிற்கு வந்தேன். அந்த நேரத்தில், வெள்ளை மாளிகையை வெளியில் இருந்து பார்த்தேன்," என்று பிரதமர் மோடி வெள்ளை மாளிகையில் தனது வரவேற்பு உரையில் தெரிவித்து இருந்தார். 

உரைக்குப் பிறகு, பிரதமர் மோடியும் அமெரிக்க அதிபர் ஜோ பிடனும் வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு தலைமை தாங்கினர். பிரதமர் மோடிக்கு முன்னதாக, பிடென் தனது உரையில், இந்தியா-அமெரிக்க உறவுகளை இந்த நூற்றாண்டின் "மிகவும் வரையறுக்கும் உறவுகள்" என்று பாராட்டினார்.