எழுந்து நின்று கை தட்டிய அமெரிக்க எம்பிக்கள்.. ஆட்டோகிராஃப் டூ செல்ஃபி வரை..கெத்து காட்டிய பிரதமர் மோடி
இந்தியப் பிரதமர் மோடி அமெரிக்க பயணத்தின் போது அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 22, வியாழன் அன்று அமெரிக்க காங்கிரஸில் உரையாற்றினார்.
வெள்ளை மாளிகை அவரை 19 பாடல்கள் கொண்ட வணக்கத்துடன் வரவேற்றது. நாடாளுமன்றத்தில் இரு நாட்டு தேசிய கீதம் முழங்கியது. வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில் ஜோ பைடனுடன் கைகோர்த்துச் செயல்படுவதாக மோடி உறுதியளித்தார். அவர் பேசும் போது, 'மோடி' 'மோடி' என்ற ஆரவாரம், சுற்று வட்டாரத்தில் இருந்து எழுந்தது. வெள்ளை மாளிகை கைதட்டலில் மூழ்கியது.
'மோடி' 'மோடி' கோஷங்கள், ஆட்டோகிராஃப்கள், செல்ஃபிகள் மற்றும் இருதரப்பு ஆதரவுடன், அமெரிக்க நாடாளுமன்றம் வியாழக்கிழமை பகல் முழுவதும் சலசலத்தது என்றே கூறலாம். உரையின் முடிவில், அமெரிக்க சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி, நரேந்திர மோடியிடம் ஆவலுடன் கையெழுத்து வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.