PM Modi: இந்தியா வளர்ந்தால் உலகம் வளரும்.! அதுமட்டுமா.!! அமெரிக்க நாடாளுமன்றத்தை அதிர வைத்த பிரதமர் மோடி
இந்திய பிரதமர் ஒருவர் அமெரிக்க நாடாளுமன்றத்தில் 2வது முறையாக உரையாற்றுவது இதுவே முதல்முறையாகும். இதற்காக இந்தியாவின் 140 கோடி மக்கள் சார்பில் நன்றி தெரிவிக்கிறேன் என்று கூறினார் பிரதமர் மோடி.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பின்படி, அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார் பிரதமர் மோடி. நேற்று நியூயார்க்கில் உள்ள ஐ.நா தலைமையில் நடைபெற்ற சர்வதேச யோகா தின நிகழ்ச்சியிலும் பிரதமர் மோடி பங்கேற்றார்.
அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அவரின் மனைவி ஜில் பைடன் ஆகியோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பிரதமர் மோடி ஆரத்தழுவி வரவேற்பை ஏற்றுக்கொண்டார்.
பின்னர் வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் அதிபர் ஜோ பைடன் மற்றும் பிரதமர் மோடி, இரு நாடுகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு பரிமாறிக் கொள்ளப்பட்டது. இந்தியா-அமெரிக்கா இடையேயான நல்லுறவும், ஒத்துழைப்பும் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வலுவடைந்து உள்ளதாக அதிபர் ஜோ பைடன் கூறினார்.
G20 மாநாட்டை தலைமை ஏற்று நடத்துவதற்கு பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார். அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார் பிரதமர் மோடி. அப்போது பேசிய அவர், “இந்திய பிரதமர் ஒருவர் அமெரிக்க நாடாளுமன்றத்தில் 2வது முறையாக உரையாற்றுவது இதுவே முதல்முறையாகும். இதற்காக இந்தியாவின் 140 கோடி மக்கள் சார்பில் நன்றி தெரிவிக்கிறேன்.
நவீன இந்தியாவில் பெண்கள் முன்னேற்றப் பாதையில் செல்கிறது. பழங்குடிப் பின்னணியில் இருந்து வந்த ஒரு பெண் இந்தியாவின் உயர்ந்த பதவியில் இருக்கிறார். உலகம் ஒரே குடும்பம் என்ற கருப்பொருளின் அடிப்படையில் இந்தியா G20 உச்சி மாநாட்டிற்கு தலைமை தாங்குகிறது என்று பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், தாம் பிரதமராக முதல் முறையாக அமெரிக்கா வந்த போது இந்தியா, உலகின் 10வது பொருளாதார நாடாக இருந்ததாகவும், இன்று 5வது பெரிய பொருளாதார நாடாக உள்ளது. இந்தியா வளரும் போது உலகம் முழுவதும் வளரும் என்று பிரதமர் மோடி உரையாற்றினார்.
பிரதமர் மோடி உரை நிகழ்த்திய போது அமெரிக்க எம்.பி.க்கள் 15 முறை எழுந்து நின்று கைத்தட்டி வரவேற்றனர். பின்னர் அவரிடம் ஆட்டோகிராப் வாங்கியதுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். இரு தலைவர்களும் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்கள்.
பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்த இருவரும், சீன அதிபரை வருங்காலத்தில் சந்திக்க இருப்பதாக பைடனும், இந்தியாவில் ஜனநாயகம் என்பது மக்களின் மரபணுவிலேயே கலந்திருப்பதாக மோடியும் கூறினார்கள். அடுத்து பேசிய பிரதமர் மோடி, இந்தியா அமெரிக்கா இணைந்து சர்வதேச சோலார் கூட்டணியை உருவாக்கியிருக்கிறோம். இந்த கூட்டணியில் உலகின் பல நாடுகளும் கைகோர்த்திருப்பதாக பிரதமர் மோடி கூறினார்.