Asianet News TamilAsianet News Tamil

33 லட்சம் பேரை பலிகேட்கும் கொரோனா... 3 லட்சம் பேர் உயிர் போவது உறுதி... அதிர வைக்கும் ஐ.நா. ஆணையம்..!

கொரோனா வைரசுக்கு ஆப்பிரிக்க கண்டத்தில் 3 லட்சம் பேர் பலியாவார்கள் என ஐ.நா. ஆணையம் கணித்துள்ளது. 
 

Corona of 33 lakhs victims ... 3 lakhs confirmed to be alive ... Commission
Author
Tamil Nadu, First Published Apr 18, 2020, 8:42 AM IST

கொரோனா வைரசுக்கு ஆப்பிரிக்க கண்டத்தில் 3 லட்சம் பேர் பலியாவார்கள் என ஐ.நா. ஆணையம் கணித்துள்ளது. Corona of 33 lakhs victims ... 3 lakhs confirmed to be alive ... Commission

உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வரும் கொரோனா வைரஸ் இதுவரை 22 லட்சத்து 23 ஆயிரத்து 240 பேருக்கு பரவியுள்ளது. இந்த கொடிய வைரசுக்கு ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 328 பேர் பலியாகியுள்ளனர். கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் அந்த முயற்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை.Corona of 33 lakhs victims ... 3 lakhs confirmed to be alive ... Commission

இந்நிலையில், கொரோனா வைரசுக்கு ஆப்பிரிக்க கண்டத்தில் 3 லட்சம் பேர் பலியாவார்கள் என ஐ.நா. ஆணையம் கணித்துள்ளது. ஆப்பிரிக்க கண்டத்தில் நேற்றைய நிலவரப்படி, கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 18 ஆயிரத்தை தாண்டியது. இந்நிலையில், தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், ஆப்பிரிக்க கண்டத்தில் 33 லட்சம் பேர் பலியாவார்கள் என்று ஆப்பிரிக்காவுக்கான ஐ.நா. பொருளாதார ஆணையம் தெரிவித்துள்ளது.
தீவிர தடுப்பு நடவடிக்கை எடுத்தால் கூட 3 லட்சம் பேர் பலியாவார்கள் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios