தங்களது கணக்குகளை கையாள்வதில் பயனர்கள் சந்தித்து வரும் சிரமத்திற்கு இன்ஸ்டாகிராம் நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது. 

தங்களது கணக்குகளை கையாள்வதில் பயனர்கள் சந்தித்து வரும் சிரமத்திற்கு இன்ஸ்டாகிராம் நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது. இன்ஸ்டாகிராம் செயலியில் திடீரென வேலைசெய்யாமல் போனதாக கூறப்படுகிறது. பயனர்கள் சிலர் தங்களது கணக்கை அனுக முடியவில்லை என்றும் அது சரிவர வேலை செய்யவில்லை என்றும் டிவிட்டரில் பதிவிட்டனர். அந்த பதிவில் இன்ஸ்டாகிராமையும் டேக் செய்திருந்தனர். இதுபோல பல பயனர்கள் தங்களது இன்ஸ்டாகிராமில் சந்திக்கும் பிரச்சனைகளை சுட்டிக்காட்டி டீவீட் செய்திருந்தனர்.

இதையும் படிங்க: அதிகரிக்கும் கொரோனா.. லாக்டவுனுக்கு பயந்து ஓடும் புலம்பெயர் தொழிலாளர்கள் - வைரல் வீடியோ!

அதிகபட்சமான இன்ஸ்டாகிராம் பயனர்கள், தங்களது கணக்குகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதாகவும் கணக்குகள் முடக்கப்பட்டதாகவும் புகாரளித்துள்ளனர். மேலும் சிலர் தங்களது கணக்குகளில் ஃபாலோவர்ஸ் (followers)-ன் எண்ணிக்கை பெரிதும் குறைந்து வருவதாகவும் பெரிய வீழ்ச்சியை காட்டுவதாகவும் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் இந்த புகார் குறித்து இன்ஸ்டாகிராம் நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: சோமாலியாவில் இரட்டை கார் வெடிகுண்டு வெடிப்பு - 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

இதுக்குறித்து இன்ஸ்டாகிராம் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், உங்களில் சிலருக்கு உங்கள் இன்ஸ்டாகிராம் கணக்கை அணுகுவதில் சிக்கல் இருப்பதை நாங்கள் அறிவோம். நாங்கள் அதை ஆராய்ந்து வருகிறோம், சிரமத்திற்கு வருந்துகிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப்பைத் தொடர்ந்து இன்ஸ்டாகிராமிலும் அடுத்தடுத்து சிக்கல்கள் எழுந்ததால், பெரும்பாலான பயனர்கள் மற்ற சமூகவலைதளங்களை நோக்கி செல்ல தொடங்கியுள்ளனர். 

Scroll to load tweet…