Asianet News TamilAsianet News Tamil

Covid in China Lemon: கொரோனாவால் எலுமிச்சை பழத்தை தேடி அலையும் சீன மக்கள்! விலை பன்மடங்கு உயர்வு! என்ன காரணம்?

சீனாவில் கொரோனா பரவல் கட்டுக்கடங்காமல் செல்கின்ற அதேவேளையில் மக்கள் எலுமிச்சை பழத்தைத் தேடி அலைந்து வருகிறார்கள்.இதனால் எலுமிச்சை பழத்தின் விலை பன்மடங்கு அதிகரி்த்துள்ளது.

Chinese people search to eat lemons to boost their immunity
Author
First Published Dec 21, 2022, 11:54 AM IST

சீனாவில் கொரோனா பரவல் கட்டுக்கடங்காமல் செல்கின்ற அதேவேளையில் மக்கள் எலுமிச்சை பழத்தைத் தேடி அலைந்து வருகிறார்கள்.இதனால் எலுமிச்சை பழத்தின் விலை பன்மடங்கு அதிகரி்த்துள்ளது.

எலுமிச்சை பழத்தில் இயற்கையாகவே வைட்டமின் சி நிறைந்துள்ளது, நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருப்பதால், அதை வாங்குவதற்காக மக்கள் படையெடுத்து வருகிறார்கள். 

சீனாவில் வேகெடுக்கும் கொரோனா!பெய்ஜிங்கில் பிணக்குவியல்! நிரம்பும் மருத்துவமனைகள்

Chinese people search to eat lemons to boost their immunity

சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தியைத் தொடர்ந்து அங்கு கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது. கடந்த சில வாரங்களாக மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு படையெடுத்து வருவதால், நிரம்பி வழிகிறது. அதேபோல கொரோனா உயிரிழப்பும் அதிகரித்துள்ளது. திங்கள்கிழமை மட்டும் சீனாவில் 5ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் தடுப்பூசி மூலம் நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்க அரசு நடவடிக்கை எடுத்துவரும் வேளையில் மக்களும் இயற்கையாகவே நோய் எதிர்ப்புச் சக்தியை பெறுவதற்காக எலுமிச்சை பழத்தை நாடத் தொடங்கியுள்ளனர்.

சீனாவில் கொரோனா வைரஸால் 20 லட்சம் பேர் உயிரிழப்பார்கள்! அதிர்ச்சித் தகவல்

சீனாவின் தென்மேற்குப் பகுதியான சிச்சுவான் மாகாணம் எலுமிச்சை விளைச்சலுக்கு பெயர்பெற்றது. சீனாவின் எலுமிச்சைத் தேவையில் 70 சதவீதம் இங்கிருந்துதான் விளைவித்து நிறைவேற்றப்படுகிறது.

இந்நிலையில் எனியூ நகரைச் சேர்ந்த வென் எனும் விவசாயி 130 ஏக்கரில் எலுமிச்சை சாகுபடி செய்திருந்தார். கொரோனா பரவல் வேகமெடுக்கும் முன்பாக வாரத்துக்கு 5 முதல் 6 டன் எலுமிச்சை மட்டுமே விற்பனையாகும். ஆனால் கடந்த சில வாரங்களாக வென் தோட்டத்தில் இருந்து 20 முதல் 30 டன் எலுமிச்சை விற்பனையாகிறது.

Chinese people search to eat lemons to boost their immunity

பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் நகரில் இருந்து வரும் வியாபாரிகள் டன் கணக்கில் எலுமிச்சை பழத்தை வாங்கிச் செல்கிறார்கள் என்று வென் தெரிவித்துள்ளார். 

சீனாவில் ஜனதோஷம், காய்ச்சலுக்கான தடுப்பு மருந்துகள்  பற்றாக்குறை ஒருபுறம் இருப்பதாலும், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்த வேண்டியிருப்தாலும்மக்கள் எலுமிச்சை பக்கம் திரும்பியுள்ளனர்.

வைட்டமின் சி சத்தி அதிகமாக இருந்தால் கோவிட் வருவதைத் தடுக்கலாம், அல்லது பாதிப்பைக் குறைக்கலாம் என்ற சீனா மருத்துவர்கள் கூறியுள்ளதால் மக்கள் எலுமிச்சை பழத்தைத் தேடிஅலைகிறார்கள். இதனால் எலுமிச்சை பழத்தின் விலை கடந்த சில நாட்களாக 3 முதல் 4 மடங்கு அதிகரித்துள்ளது.

புதிய செயற்கைக்கோள் கண்காணிப்புக்காக புறப்பட்ட சீன உளவுக் கப்பல் யுவான் வாங்-3

லியு யான்ஜிங் எனும் விவசாயி கூறுகையில் “ எலுமிச்சை பழத்தின் விலை கடந்த சில நாட்களாக முன்பிருந்த விலையைவிட 3 முதல் 4 மடங்கு அதிகரித்துள்ளது.முன்பு எலுமிச்சை 3 முதல் 4 யென் விலையானது. இப்போது, 30 முதல் 40 அமெரிக்க சென்ட்கள் வரை விற்கப்படுகிறது” எனத் தெரிவித்தார்

Follow Us:
Download App:
  • android
  • ios