சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தியபின் அங்கு நிலைமை படுமோசமாகியுள்ளது. கொரோனா நோயாளிகள் அதிகரித்து மருத்துவமனைகள் நிரம்பிவழிகின்றன என்று தொற்று நோய்வல்லுநர் எரிக் பீஜெல் டிங் தெரிவித்துள்ளார்.

சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தியபின் அங்கு நிலைமை படுமோசமாகியுள்ளது. கொரோனா நோயாளிகள் அதிகரித்து மருத்துவமனைகள் நிரம்பிவழிகின்றன என்று தொற்று நோய்வல்லுநர் எரிக் பீஜெல் டிங் தெரிவித்துள்ளார்.

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலக நாடுகளையே ஆட்டுவித்தது. ஆனால், தடுப்பூசிகண்டுபிடிக்கப்பட்டபின் உலக நாடுகளில் கொரோனாவின் தாக்கம் ஏறக்குறையக் குறைந்துவிட்டது.கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமைக்ரான் உள்ளிட்ட வைரஸ்கள் பரவினாலும் மக்கள் உடலில் உருவான நோய்தடுப்புச் சக்தி அதிலிருந்து பாதுகாக்க வைக்கிறது.

ஆனால் சீனாவில் மட்டும் கொரோனா பரவல் குறையவில்லை. முதன்முதலில் கொரோனா வைரஸ் பரவியபோது இருந்த தீவிரமான சூழல், அச்சமடையவைக்கும் சூழல்இப்போது அங்கு நிலவுகிறது.
இதுபோன்ற நிலைமை வரக்கூடாது என்பதற்காகவே சீன அரசு ஜூரே கோவிட் கொள்கையை பின்பற்றியது. ஏதாவது ஒருஇடத்தில் கொரோனா பரவல் இருந்தாலும் அங்கு கடும்கட்டுப்பாடுகள், ஊரடங்கு நடவடிக்கையை அமல்படுத்தி, கொரோனா பரவலைக் குறைத்தது. 

அசுர வேகத்தில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்புகள்.. மயானங்களில் குவியும் சடலங்கள் - சீனாவில் என்ன நடக்கிறது?

ஆனால், சீன அரசின் இந்த கடும் கட்டுப்பாடுகளுக்கு மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து கடந்த சில மாதங்களாகவே பல்வேறு நகரங்களில் போராட்டம் நடத்தினர். 

சீனாவில் கொரோனா பரவி வரும் நிலையில், கட்டுப்பாடுகளை தளர்த்தக் கோரி மக்கள் நடத்திய போராட்டத்தால் பெரும் விளைவுகள் உருவாகும் என்று சீன அரசு எச்சரித்தது. ஆனால், சீனாவில் நிலவும் கட்டுப்பாடுகளோடு மக்கள் இயல்பு வாழ்க்கையை வாழ முடியாமல் திணறினர்.

இதையடுத்து, சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக சீன அரசு அறிவித்தது. சீன அரசுஅறிவிப்பைத் தொடர்ந்து, கடந்தசில வாரங்களாக கொரோனா பரவல் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது. 

சீனாவின் தொற்று நோய் வல்லுநரும், சுதாதார பொருளாதாரவல்லுநரான எரிக் பீஜெல் டிங் ட்விட்டரில் வீடியோ பதிவிட்டு கூறுகையில் “ சீனாவில் 60 சதவீதமக்கள், உலகளவில் 10 சதவீத மக்கள் அடுத்த 90 நாட்களில் கொரோனாவில் பாதிக்கப்படுவார்கள். லட்சக்கணக்கில் உயிரிழப்புகளை எதிர்பார்க்கலாம்.” எனச் எச்சரித்துள்ளார்.

தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள ஒரு மின்மயானத்தில் கொரோனாவில் உயிரிழந்தவர்களின் உடல்கள் எரியூட்டுவதற்காகவும், அடக்கம் செய்யவும் தங்கள் அன்புக்குரியவர்களின் உடல்களை வைத்து காத்திருக்கிறார்கள். இதனால் ஈமக்கரியை செய்யும் இடம் முழுவதும் மனித உடல்களாகக் காட்சியளிக்கிறது. 

காதலியுடன் உடலுறவு.. ரகசியமாக படம்பிடித்த இளைஞன்.. நீதிமன்றம் சொன்ன வித்தியாசமான தீர்ப்பு - என்ன தெரியுமா?

கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தியதால்,சீனா பேரழிவுகளைச் சந்திக்கப் போகிறது என்று வால்ஸ்ட்ரீட் ஜர்னல் நாளேடு தெரிவித்துள்ளது.

எரிக் பீஜெல் டிங் கூறுகையில் “ சீன கம்யூனிஸ்ட் கட்சியின் இலக்கு என்பது, யாரெல்லாம் பாதிக்கப்படுகிறார்களோ பாதிக்கப்படட்டும், இறப்பவர்கள் உயிரிழக்கட்டும் எனக் கைவிட்டுவிட்டது. ஆரம்பகால நோய்த்தொற்றுகள், ஆரம்பகால இறப்புகள், ஆரம்பகால உச்சநிலை, கொரோனா மீண்டும் தொடங்குவதன் அறிகுறியாகும்” எனத் தெரிவித்துள்ளார்.

Scroll to load tweet…

கடந்த மாதம் 19ம்தேதிக்கு முன்புவரை சீனாவில் கொரோனாவில் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. ஆனால், இப்போது கூட்டம் கூட்டமாக மக்கள் உயிரிழந்து வருகிறார்கள். இது குறித்து சீன அரசு சார்பில் எந்தவிதமான பதிலும் இதுவரை இல்லை.

சிங்கப்பூரில் மிஸ் பண்ணக்கூடாத டாப் 10 சுற்றுலா இடங்கள் என்னென்ன? முழு விபரம் இதோ !

பெய்ஜிங் நகரில் உள்ள டாங்ஜியாவோ மயானத்தின் ஊழியர்கள் கூறுகையில் “ கடந்த சில வாரங்களாக இங்கு கொரோனாவில் உயிரிழந்தவர்களின் உடல்கள் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது. எங்களுக்கு பணிச்சுமை கடுமையாக அதிகரித்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.