புதிய செயற்கைக்கோள் கண்காணிப்புக்காக சீன உளவுக் கப்பல் யுவான்வாங்-3 புறப்பட்டுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.

புதிய செயற்கைக்கோள் கண்காணிப்புக்காக சீன உளவுக் கப்பல் யுவான்வாங்-3 புறப்பட்டுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.

சீனாவின் உளவுக் கப்பலான யுவான் வாங்-5 கப்பல் கடந்த வாரம் இந்தியப் பெருங்கடல் பகுதிக்குள் நுழைந்தது. இந்த கப்பல் நுழைந்ததில் இருந்து இந்திய கடற்படை தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டது. ட்ரோன்கள் மூலம் கண்காணித்தல், கடற்புற எல்லைகளைக் கண்காணித்தலில் ஈடுபட்டது.

ஸ்விக்கி மூலம் ரூ.16 லட்சத்திற்கு மளிகைப் பொருட்களை ஆர்டர் செய்தவர்!

சீனாவின் அதிநவீன உளவுக் கப்பலான யுவான் வாங்-5 கப்பலில் அதிநவீன உளவுபார்க்கும் கருவிகள், கண்காணிப்புக் கருவிகள், ஆயுதங்கள் உள்ளன. இந்தியா அக்னி-5 அணுஆயுதம் தாங்கிச் செல்லும் ஏவுணையை பரிசோதிக்க முயன்ற நிலையில் இந்த கப்பல் இந்திய பெருங்கடல் பகுதியில் நுழைந்தது.

Scroll to load tweet…

ஆனால், அருணாச்சலப்பிரதேச எல்லையான தவாங் பகுதியில் கடந்த 9ம் தேதி இந்திய ராணுவத்தினருக்கும், சீன ராணுவத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலுக்குப்பின் சீன கப்பல் இந்தியப் பெருங்கடல் பகுதியிலிருந்து புறப்பட்டுச் சென்றது.

செலவே இல்லாமல் சுற்றுலா செல்ல வேண்டுமா.? நீங்க வந்தா மட்டும் போதும்! - இந்த நாடு பற்றி தெரியுமா உங்களுக்கு?

இந்நிலையில் சீனாவின் அதிகாரபூர்வ நாளேடான பீப்பிள்ஸ் டெய்லி ட்விட்டரில் ஒரு செய்தியை பதிவிட்டுள்ளது. அதில் “ சீனாவின் கண்காணிப்புக் கப்பலான யுவான் வாங்-3 ஒரு துறைமுகத்திலிருந்து புதிய செயற்கைக்கோள் கண்காணிப்புக்காக புறப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் இந்த கப்பல் 120 நாட்கள் கடலில் செலவிட்டு, 33 ஆயிரம் நாட்டிகல் மைல்களைக் கடந்துள்ளது. சென்சு-14 ராக்கெட் உள்ளிட்ட 4விதமான இலக்குகளை முடித்துள்ளது”எனத் தெரிவித்துள்ளது