chinese loan apps: சீன லோன் ஆப்ஸ்: பேடிஎம், ரேசர்பே செயலிகளின் ரூ.46 கோடி முடக்கம்: அமலாக்கப்பிரிவு அதிரடி
சீன நிறுவனங்களின் கடன் செயலிகள் மற்றும் முதலீட்டு நிறுவனங்களில் கடந்த வாரம் ரெய்டு நடத்தியதன் எதிரொலியாக, பேடிஎம், ஈஸிபஸ், கேஷ்ப்ரீ,ரேசர்பே உள்ளிட்ட பேமெட் கேட்வேக்களின் ரூ.46.67 கோடியை முடக்கியுள்ளதாக அமலாக்கப்பிரிவு தெரிவித்துள்ளது.
சீன நிறுவனங்களின் கடன் செயலிகள் மற்றும் முதலீட்டு நிறுவனங்களில் கடந்த வாரம் ரெய்டு நடத்தியதன் எதிரொலியாக, பேடிஎம், ஈஸிபஸ், கேஷ்ப்ரீ,ரேசர்பே உள்ளிட்ட பேமெட் கேட்வேக்களின் ரூ.46.67 கோடியை முடக்கியுள்ளதாக அமலாக்கப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த நிதி அனைத்தும் சட்டவிரோதப் பணப்பரிமாற்ற நடவடிக்கையின் கீழ் முடக்கப்பட்டுள்ளது என்று அமலாக்கப்பிரிவு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமலாக்கப்பிரிவு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
நன்கொடை தராத கடைக்காரரிடம் தகராறு: 3 நிர்வாகிகளை சஸ்பெண்ட் செய்து கேரளா காங்கிரஸ் நடவடிக்கை
கடந்த 14ம் தேதி சீன லோக் செயலிகளில் நடக்கும் மோசடி தொடர்பாக டெல்லி, மும்பை, காஜியாபாத், லக்னோ, கயா உள்ளிட்ட இடங்களில் அமலாக்கப்பிரிவு சோதனை நடத்தியது.
டெல்லி, குருகிராம், மும்பை, புனே, சென்னை, ஹைதராபாத், ஜெய்பூர், ஜோத்பூர், பெங்களூரு ஆகிய இடங்களில் உள்ள பேமெம்ட் கேட்வே மற்றும் 16 வங்கிகளிலும் விசாரணை நடத்தப்பட்டது. இந்த சோதனை மற்றும் விசாரணையின்போது, ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் நாகாலாந்தில் உள்ள கோஹிமா போலீஸாரின் சைபர் பிரிவு முதல்தகவல் அறிக்கையை சீன செயலி நிறுவனங்கள் மீதுபதிவு செய்தது அதைத் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பேமெண்ட் கேட்வே நிறுவனங்கள் கணக்கில்வராத ஏராளமான பணத்தை வைத்துள்ளன. இதன்படி, புனேயில் உள்ள ஈஸிபஸ் பிரைவேட் லிமிட் ரூ.33.36கோடி, பெங்களூரு ரேசர்பே சாப்ட்வேர் லிமிட் ரூ.8.21 கோடி, பெங்களூருவில் உள்ள கேஷ்ப்ரீ பேமெண்ட் இந்தியா பிரைவேட் லிமிட் ரூ.1.28 கோடி, பேடிஎம் பேமெண்ட் சர்வீஸ் ரூ.1.11 கோடி முடக்கப்பட்டுள்ளது.
ரேசர்பே, கேஷ்ப்ரீ பேமெண்ட், பேடிஎம் ஆகிய நிறுவனங்கள் சீனாவைச் சேர்ந்த தொழிலதிபர்களால் நடத்தப்படுகிறது, கட்டுப்படுத்தப்படுகிறது குறிப்பிடத்தக்கது
இந்த நிறுவனங்களில் நடத்தப்பட்ட ரெய்டின்போது, ஏராளமான அடையாள அட்டைகள், பேமெண்ட் கேட்வே வங்கிக் கணக்குகள், போலி முகவரியில் பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன.
கொல்லத்தில் பாரத் ஜோடோ யாத்ராவுக்கு கேட்ட நன்கொடை கொடுக்காததால் கடைக்காரரை தாக்கியதால் பரபரப்பு!!
பெங்களூருவில் மொபைல் ஆப் மூலம் மக்களுக்கு சிறிய தொகையைகடன் கொடுத்துவிட்டு, அதைத் திருப்பிச் செலுத்தாதவர்களை தொடர்ந்து கடன் செயலி நிறுவனங்கள் தொந்தரவு செய்தன. இதையடுத்து, பொதுமக்கள் அளித்த புகாரில் 18 முதல் தகவல் அறி்க்கையை பெங்களூரு சைபர் கிரைம் போலீஸார் பதிவு செய்தனர். இதன் அடிப்படையில் அமலாக்கப்பிரிவு ரெய்டு நடத்தியது.