சீனாவின் வுகான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றில் இருந்து மக்களை காப்பது மட்டுமின்றி, வேலை இழப்பு, வரலாறு காணாத அளவிற்கு பொருளாதார சரிவு, வர்த்தக பாதிப்பு என ஏகப்பட்ட சிக்கல்களை வல்லரசு நாடுகளில் ஆரம்பித்து வளரும் நாடுகள் வரை பலவும் சந்தித்து வருகின்றன. கொரோனா குறித்து உலக நாடுகளை எச்சரிக்க சீன அரசு தவறிவிட்டதாகவும், இந்த பாதிப்புகள் அனைத்திற்கும் சீனா தான் பொறுப்பு என்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடக்கம் முதலே குற்றச்சாட்டி வருகிறார். 

 

இதையும் படிங்க: யூ-டியூப் லைவில் கணவருக்கு லிப் லாக்... வனிதாவை பார்த்து தலையில் அடித்துக்கொள்ளும் நெட்டிசன்கள்....!

உலகையே ஆட்டி படைக்கும் கொரோனா வைரஸால் இதுவரை 1.17 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் 5 லட்சத்து 40 ஆயிரத்து 764 பேர் உயிரிழந்துள்ளனர். 67 லட்சத்து 40 ஆயிரத்து 096 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உலகிலேயே கொரோனா பரவல் அதிகமுள்ள நாடாக அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 30.4 லட்சம் பேர் தொற்றால் பாதிப்பக்கப்பட்டுள்ளனர், 1.32 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இரண்டாவது இடத்தில் பிரேசிலும், மூன்றாவது இடத்தில் இந்தியாவும் உள்ளது. 

 

இதையும் படிங்க: ஒரே ஒரு போன் கால்.... வெளவெளத்து போன ரஜினிகாந்த்... இரவெல்லாம் தூக்கமில்லாமல் தவித்த கதை தெரியுமா?

சீன ஆய்வகங்களில் இருந்து கொரோனா வைரஸ் வந்திருக்கலாம் என அமெரிக்க உளவுத்துறை குற்றச்சாட்டி வந்தது. இதை உறுதி செய்யும் விதமாக சட்ட பேராசிரியரான ஜு ஜாங்ருன் சீன அரசு மீது தொடர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வந்தார். கொரோனா வைரஸ் பரவலில் சீன அரசின் மோசடி இருப்பதாகவும், நாட்டின் நிர்வாகத்தை சீன அதிபர் ஜி ஜின்பிங் சீர்குலைத்து வருவதாகவும் கடந்த பிப்ரவரி மாதம் கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் ஜு ஜாங்ருன் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக கூறி கைது செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

இதையும் படிங்க: காந்த கண்ணழகி சில்க் ஸ்மிதா பற்றி யாரும் அறிந்திடாத தகவல்கள்... இதோ...!

இதற்கு முன்னதாக 2018ம்  ஜு ஜாங்ருன் ஆண்டும் அரசுக்கு எதிராக கட்டுரை எழுதியுள்ளார். இப்படி அரசுக்கு எதிரான தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட்ட வந்ததால் சீன அரசு அவரை கைது செய்துள்ளது. ஆனால் ஜு ஜாங்ருன் மனைவிக்கு போன் செய்த போலீசாரோ, தென்மேற்கு நகரமான செங்டூவில் விபச்சார தொழிலில் ஈடுபட்ட போது அவரை கைது செய்ததாக தெரிவித்துள்ளனர். ஆனால் உண்மையில் பெய்ஜிங்கின் புறநகர்  பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து  ஜு ஜாங்ருன் உள்ளிட்ட 20 பேர் கைது செய்யப்பட்டதாக அவருடைய நண்பர்கள் தெரிவித்துள்ளனர். சீன அரசு தொடர்ந்து கருத்து சுதந்திரத்திற்கு எதிராக செயல்படுவதாக கண்டனங்கள் எழுந்துள்ளன.