யூ-டியூப் லைவில் கணவருக்கு லிப் லாக்... வனிதாவை பார்த்து தலையில் அடித்துக்கொள்ளும் நெட்டிசன்கள்....!

இந்நிலையில் நேற்று யூ-டியூப் லைவில் ரசிகர்களின் கேள்விகளுக்கு வனிதா பதிலளித்தார். 

Netizens slam vanitha peter paul another lip lock video in youtube live

பழம்பெரும் நட்சத்திர ஜோடிகளான மஞ்சுளா - விஜயகுமார் தம்பதியின் மூத்த மகளான, வனிதா ஏற்கனவே இரண்டு முறை திருமணம் ஆகி கருத்து வேறுபாடு காரணமாக அவர்களிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வந்தார்.  குடும்பத்தினர் மத்தியிலும், அவப்பெயர் எடுத்து யாருடனும் பேசாமல் தன்னுடைய இரு மகள்களுடன் வசித்து வந்தார். இந்நிலையில் தனது யூ-டியூப் சேனலுக்கு உதவி செய்ய வந்த விஷவல் எடிட்டர் பீட்டர் பால் என்பவரை கடந்த 27ம் தேதி கிறிஸ்துவ முறைப்படி 3வது முறையாக திருமணம் செய்து கொண்டார். 

Netizens slam vanitha peter paul another lip lock video in youtube live

கடந்த 7 ஆண்டுகளாக பீட்டர் பாலை பிரிந்து வாழ்ந்து வரும் அவருடைய முதல் மனைவி எலிசபெத் ஹெலன் போர்க்கெடி தூக்கியுள்ளார்.  பீட்டர் பால் ஒரு குடிகாரர், பெண்கள் விவகாரத்திலும் அடிக்கடி சிக்கிக் கொள்ளவார். என்ன இருந்தாலும் கணவர் என்பதால் அனைத்தையும் பொறுத்துக்கொண்டேன்.  எனக்கு எனது கணவருடன் சேர்ந்து வாழவே விருப்பம், வனிதா என் கணவரை அபகரித்துக்கொண்டார் என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். 

Netizens slam vanitha peter paul another lip lock video in youtube live

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தனது யூ-டியூப் சேனலில் வீடியோ ஒன்றை வெளியிட்ட வனிதா, பீட்டர் பால் மிகவும் நல்லவர் என்றும். அவர் குடிக்கவே மாட்டார், பொம்பள பொறுக்கி என அபாண்டமாக ஹெலன் குற்றச்சாட்டுகிறார் எனக்கூறினார். அத்தோடு நிற்காமல் பீட்டர் பால் குடிகாரர் இல்லை என்பதற்கு ஆதாரமாக தனது யூ-டியூப் சேனலில் வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார். 

Netizens slam vanitha peter paul another lip lock video in youtube live

 

இதையும் படிங்க: ஒரே ஒரு போன் கால்.... வெளவெளத்து போன ரஜினிகாந்த்... இரவெல்லாம் தூக்கமில்லாமல் தவித்த கதை தெரியுமா?

போதாக்குறைக்கு வீட்டிற்குள் கணவன், மனைவி அடிக்கும் முத்த லூட்டிகளை வேறு போட்டோவாக எடுத்து சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். குழந்தைகள் இருக்கும் வீட்டில் ஏன் இப்படி செய்கிறீர்கள்?, வெட்கமே இல்லாமல் விருந்தினர்கள், பிள்ளைகள் மத்தியில் இப்படியா முத்தம் கொடுப்பீர்கள் என சகட்டுமேனிக்கு துளைத்தெடுக்கின்றனர். 

Netizens slam vanitha peter paul another lip lock video in youtube live

 

இதையும் படிங்க: இளையராஜா மகனுக்கே இப்படியொரு நிலையா?... மதமாற்றம் வரை யுவனை தள்ளியது இதுதானாம்...!

இந்நிலையில் நேற்று யூ-டியூப் லைவில் ரசிகர்களின் கேள்விகளுக்கு வனிதா பதிலளித்தார். அப்போது பீட்டர் பாலை நிறைய பேர் கேட்டதால், அவரையும் திரையில் அறிமுகப்படுத்தினார். அப்போது பீட்டர் பாலுக்கு வனிதா லிப் டூ லிப் முத்தம் கொடுத்தார். இது தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. என்ன தான் முத்தம் அன்பின் வெளிப்பாடு என்றாலும், பல்லாயிரக்கணக்கானோர் பார்த்துக்கொண்டிருக்கும் யூ-டியூப் லைவில் இது எல்லாம் தேவையா? என வனிதா மீது விமர்சனங்கள் எழுந்துள்ளது. 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios