நிதி தட்டுப்பாடு... வேறு வழி இல்லாமல் உக்ரைனுக்கு ஆயுதங்களை விற்ற பாகிஸ்தான்!
பாகிஸ்தான் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கவில்லை என்று திட்டவட்டமாக மறுத்து வரும் நிலையில், தொடர்ந்து ஆயுத ஒப்பந்தங்கள் தொடர்பான தகவல்கள் கசிந்து வருகின்றன.
ரஷ்யாவுடனான போரில் ஈடுபட்டிருக்கும் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவதற்காக அமெரிக்காவைச் சேர்ந்த இரண்டு தனியார் நிறுவனங்களுடன் பாகிஸ்தான் 364 மில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்ததில் பாகிஸ்தான் கையெழுத்திட்டுள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.
ராவல்பிண்டியில் உள்ள பாகிஸ்தான் விமானப்படைத் தளமான நூர் கானில் இருந்து பிரிட்டிஷ் ராணுவ சரக்கு விமானம் ஐந்து முறை பிரிட்டனுக்கும் ருமேனியாவுக்கும் பயணித்துள்ளதாக பிபிசி உருது செய்தி வெளியிட்டுள்ளது. முதலில் அக்ரோதிரியில் உள்ள சைப்ரஸ் பிரிட்டிஷ் ராணுவத் தளத்துக்கும் பின் உக்ரைனின் அண்டை நாடான ருமேனியாவுக்கும் அந்த சரக்கு விமானம் பயணித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தொடரும் ஆரஞ்சு அலர்ட்... தமிகழத்தில் நாளை மிக கனமழை எச்சரிக்கை: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
அமெரிக்கா கொடுத்த அழுத்தத்தினால் பாகிஸ்தான் போர்த் தளவாடங்களை உக்ரைனுக்கு விற்பனை செய்துவருகிறது என அமெரிக்க ஊடகங்களில் செய்தி வெளியானது. ஆனால், உக்ரைனுக்கு எந்த ஆயுத உதவும் வழங்கவில்லை என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் உறுதியாக மறுப்பு தெரிவித்தது. இந்த நிலையில் பிபிசியின் அறிக்கை வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் இதுவரை 364 மில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுத தளவாடங்களை உக்ரைனுக்கு விற்றுள்ளது என பிபிசி கூறுகிறது. அமெரிக்கத் தரவுகளை மேற்கோள் காட்டி, 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாகிஸ்தான் உக்ரைனுக்கு ஆயுதம் வழங்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது என்று கூறுகிறது.
குளோபல் மிலிட்டரி நிறுவனடத்துடன் 232 மில்லியன் டாலர் மதிப்பிலான முதல் ஒப்பந்தம் கையெழுத்தானதாகவும், பின் நார்த்ராப் குரும்மன் நிறுவனத்துடன் 132 மில்லியன் டாலர் மதிப்பிலான மற்றொரு ஒப்பந்தம் போடப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தங்கள் சென்ற அக்டோபர் மாதம் முடிவடைந்துள்ளதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.
பாகிஸ்தான் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கவில்லை என்று திட்டவட்டமாக மறுத்து வரும் நிலையில், தொடர்ந்து ஆயுத ஒப்பந்தங்கள் தொடர்பான தகவல்கள் கசிந்து வருகின்றன.
தொலைதூர இலக்கைத் தகர்க்கும் நிர்பய் ஏவுகணை! முப்படைகளுக்கு வலுசேர்க்கும் புதிய ராக்கெட்!