Asianet News TamilAsianet News Tamil

தொலைதூர இலக்கைத் தகர்க்கும் நிர்பய் ஏவுகணை! முப்படைகளுக்கு வலுசேர்க்கும் புதிய ராக்கெட்!

நிர்பய் ஏவுகணைகள் சப்-சோனிக் ஏவுகணைகளைப் போன்ற வேகத்தில் சென்று இலக்கைத் தாக்கும் வல்லமை கொண்டவையாக இருக்கும்.

Nirbhay class long-range cruise missiles to be part in all three defence forces' arsenal sgb
Author
First Published Nov 14, 2023, 10:05 PM IST

பாதுகாப்புப் படைகளின் சக்தியை அதிகரிக்கும் வகையில், மூன்று பாதுகாப்புப் படைகளும் இப்போது 1,000 கிமீ தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கும் நிர்பய் ரக தொலைதூர ஏவுகணைகளைப் பெற உள்ளன.

நிர்பய் ரக தொலைதூர ஏவுகணைகள் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் (DRDO) உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்த ஏவுகணைகள் சப்-சோனிக் ஏவுகணைகளைப் போன்ற வேகத்தில் சென்று இலக்கைத் தாக்கும் வல்லமை கொண்டவையாக இருக்கும்.

"நிர்பய் ஏவுகணைகளை வழங்குவதற்கான திட்டத்தை அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. பரிசீலனை இறுதிக் கட்டத்தில் உள்ளது. இந்த ஏவுகணைகள் கிடைத்ததும் முப்படைகளுக்கும் இலக்குகளைத் தாக்க சப்-சோனிக் க்ரூஸ் ஏவுகணைகளைப் பயன்படுத்தும் திறன் கிடைத்துவிடும்" என்று பாதுகாப்பு வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

கிராமி விருதுக்கான ரேஸில் பிரதமர் மோடி எழுதிய சிறுதானியங்கள் பற்றிய பாடல்

Nirbhay class long-range cruise missiles to be part in all three defence forces' arsenal sgb

இந்த ஏவுகணையை மற்ற இரண்டு பாதுகபாப்பு சேவைகளில் சேர்ப்பதற்கு சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு அனுமதி வழங்கியது.

சப்சோனிக் நிர்பய் ரக ஏவுகணைகள் மற்றும் சூப்பர்சோனிக் பிரம்மோஸ் ஏவுகணைகள் இந்தியப் படைகளின் ஆயுதக் களஞ்சியத்தில் ஒரு முக்கிய சக்தியாக இருக்கும். படிப்படியாக பலம் பெற்றுவரும் ராக்கெட் சக்தியில் ஒரு பகுதியாக நிர்பய் ஏவுகணைகளும் இருக்கும்.

நடுத்தர தூர இலக்கைத்த ஆக்கும் பராலே ரக ஏவுகணைகளை பாதுகாப்புப் படைகளில் சேர்ப்பதற்கான ஒப்புதலும் அண்மையில் வழங்கப்பட்டது. பராலே ஏவுகணைகள் படைகளில் சேர்க்கப்பட்ட பின்பு ஒருங்கிணைந்த தனிப்படை ஒன்றும் உருவாக்கப்படலாம் என பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் சொல்கின்றன.

இதனிடையே, பிரம்மோஸ் ஏவுகணைகளின் வரம்புகளும் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளன. மேம்படுத்தப்பட்ட இந்த ஏவுகணைகளின் சோதனையும் வருங்காலத்தில் நடத்தப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

ரூ.430 கோடிக்கு விற்பனையான ரேஸ் கார்... மெர்சிடஸ் பென்ஸ்க்கு சவால் விடும் ஃபெராரி

Follow Us:
Download App:
  • android
  • ios