Asianet News TamilAsianet News Tamil

ரூ.430 கோடிக்கு விற்பனையான ரேஸ் கார்... மெர்சிடஸ் பென்ஸ்க்கு சவால் விடும் ஃபெராரி

1962ஆம் ஆண்டு வெளியான ஃபெராரி 250 ஜிடிஓ (Ferrari 250 GTO) தான் ரூ.430 கோடி வசூல் சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்பும் இதே கார்தான் மிகவும் விலை உயர்ந்த கார் என்ற பெருமையைப் பெற்றது.

World most expensive Ferrari sold for Rs 430 crore, the second most expensive car after Mercedes sgb
Author
First Published Nov 14, 2023, 8:53 PM IST | Last Updated Nov 14, 2023, 8:53 PM IST

வேகமான மற்றும் விலையுயர்ந்த ஸ்போர்ட்ஸ் கார்களைப் பற்றி பேசும்போது பெரும்பாலான மக்களின் மனதில் தோன்றும் முதல் பெயர் ஃபெராரி. அனைத்து ஃபெராரி கார்களும் சிறப்பாக வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. இருப்பினும் சில அரிய மாடல்களும் இருக்கின்றன. அப்படி ஒரு அரிய மாடல் ஏலத்தில் ரூ. 430 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் அந்த ஃபெராரி கார் உலகின் மிக விலைக்கு விற்கப்பட்ட ஃபெராரி கார் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. 1962ஆம் ஆண்டு வெளியான ஃபெராரி 250 ஜிடிஓ (Ferrari 250 GTO) தான் இந்த வசூல் சாதனையைப் படைத்துள்ளது. 1962இல் ஃபாக்ட்ரி ரேஸ் டீம் பரிந்துரை செய்தது கார் என்பது ஃபெராரி 250 ஜிடிஓ காரின் சிறப்பு. இதற்கு முன்பும் ஃபெராரியின் மிகவும் விலை உயர்ந்த கார் என்ற பெருமையைப் பெற்றது மற்றொரு ஃபெராரி 250 GTO தான்.

ஃபெராரி 250 ஜிடிஓ மிகவும் அரிதான மெர்சிடிஸ் 300 எஸ்எல்ஆர் (Mercedes 300 SLR Uhlenhaut Coupe) காரைப் பின்னுக்குத் தள்ளி இதுவரை மிக அதிக விலைக்கு விற்கப்பட்ட காராக கூட மாறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மெர்சிடிஸ் 300 கார் 143 மில்லியன் டாலர் (சுமார் 1000 கோடி ரூபாய்) தொகைக்கு விற்பனையானது.

ரூ.430 கோடிக்கு ஏலம் போன ஃபெராரி 250 ஜிடிஓ முதலில் 4.0-லிட்டர் யூனிட்டைக் கொண்டிருந்தது. பிறகு 3.0-லிட்டர் யூனிட்டிற்கு மாற்றப்பட்டது.

ஃபெராரி 250 ஜிடிஓ 1962ஆம் ஆண்டு நர்பர்கிங் 1,000 கிலோமீட்டர்களில் ரேசில் முதல் தர முடிவைப் பெற்றது. துரதிர்ஷ்டவசமாக  அதிக வெப்பமடையும் பிரச்சினை ஏற்பட்டதால், அந்த ஆண்டு நடைபெற்ற 24 மணிநேர லீ மான்ஸ் ரேஸில் இந்தக் கார் போட்டியிட முடியவில்லை. இந்த கார் கடைசியாக 1985 இல் அமெரிக்கர் ஒருவரால் வாங்கப்பட்டது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios