சிங்கப்பூரில் பரபரப்பு.. கோவிலில் வைத்து பெண்ணை அறைந்த வழக்கறிஞர் ரவி மாடசாமி - சிங்கை போலீஸ் அதிரடி!

சிங்கப்பூரில் ஏற்கனவே சர்ச்சையில் சிக்கி சஸ்பெண்ட் செய்யப்பட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த சிங்கப்பூர் வழக்கறிஞர் ரவி மாடசாமி, என்கின்ற எம். ரவி, கடந்த வெள்ளிக்கிழமை சவுத் பிரிட்ஜ் சாலையில் உள்ள ஒரு இந்து கோவிலில், ஒரு பெண்ணின் இடது கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Case field against Indian Origin Singapore Lawyer ravi for hitting a women in hindu temple ans

தற்போது 54 வயதாகும் அந்த நபர் மீது, கடந்த சனிக்கிழமையன்று, சிங்கப்பூரின் மாநில நீதிமன்றங்களில் நான்கு குற்றச்சாட்டுகள் ஒப்படைக்கப்பட்டன. அதில் ஒன்று, தானாக முன்வந்து ஒருவரை காயப்படுத்தியதற்காக, மற்றொன்று பொது இடங்களில் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதற்காக என்று அவர் மீது இப்பொது மொத்தம் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் நடந்த அன்று அவர், ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் மதியம் 12 மணியளவில் அந்தப் பெண்ணை அறைந்ததாகக் கூறப்படுகிறது. அங்கு அவர் அநாகரீகமான வார்த்தைகளால் பயன்படுத்தி கத்தியதாகவும் கூறப்படுகிறது. பின்னர் அவர் கோவிலில் இருந்த மற்றொரு பெண்ணை விபச்சாரி என்று கூறி, அவர் மனதை புண்படுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

சொந்த மகளை கொன்ற தகப்பன்.. கொடூரமாக எரிக்கப்பட்ட 2.5 வயது குழந்தை - 5 ஆண்டுகள் கழித்து மீட்கப்பட்ட உடல்!

முன்னதாக, சம்பவத்தன்று காலை 11 மணியளவில், பகோடா தெருவில், ஒருவரைத் தவறான வார்த்தைகளை பயன்படுத்தி அவர் திட்டியதும் குறிப்பிடத்தக்கது. அந்த நபரை நோக்கி, தமிழில் அவர் அவதூறான வார்த்தைகளை பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ரவி, சனிக்கிழமை மருத்துவப் பரிசோதனைக்காக மனநலக் கழகத்தில் காவலில் வைக்கப்பட்டார். வருகின்ற செப்டம்பர் 29ம் தேதி அன்று, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்.

வழக்கறிஞர் ரவி மீது, ஏற்கனவே இதே போன்ற இரண்டு குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன. கடந்த ஜூலை 12 அன்று, அவர் Yio Chu Kang MRT நிலையத்திற்கு அருகில் ஒரு நபரை கன்னத்தில் அறைந்ததாகக் கூறப்படுகிறது. அட்டர்னி ஜெனரல், வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட சங்கத்திற்கு எதிராக சிங்கப்பூரின் நீதி அமைப்பின் ஒருமைப்பாட்டைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் "ஆதாரமற்ற மற்றும் கடுமையான" குற்றச்சாட்டுகளை முன்வைத்ததற்காக, ரவி தற்போது அதிகபட்சமாக ஐந்தாண்டு இடைநீக்கத்தை அனுபவித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிளாஸ்டிக் மறுசுழற்சிக்கு புதிய வழி; சிங்கப்பூர் ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios