பிளாஸ்டிக் மறுசுழற்சிக்கு புதிய வழி; சிங்கப்பூர் ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு
பிளாஸ்டிக் பொருள்களை, சுற்றுச்சூழலுக்கு பெரிதும் பாதிப்பு இல்லாத வகையில் மறுசுழற்சிக்கு உட்படுத்துவதற்கான ஒரு புதிய வழியை சிங்கப்பூரின் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக (என்டியு) ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
சிங்கப்பூர் ஆய்வாளர்கள் உருவாக்கி இருக்கும் புதிய வழிமுறையின்படி சிறிய மற்றும் பெரிய அளவிலான பிளாஸ்டிக் பைகள், மெத்து (ஸ்டைரோஃபோம்) பெட்டிகள், கையில் எடுத்துச் செல்லக்கூடிய பிளாஸ்டிக் பெட்டிகள், பிவிசி கழிவுநீர்க் குழாய்களைக்கூட வேதியியல் முறையில் மறுசுழற்சிக்கு உட்படுத்த முடியும் என்கின்றனர்.
இம்முறையின் மூலம் சுற்றுச்சூழலில் கலக்கக்கூடிய கரிமக்கழிவின் அளவு மிகக் குறைவாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த பிளாஸ்டிக் மறுசுழச்சி முறையில், பிளாஸ்டிக் பொருள்களின் உறுதியான மூலக்கூறுகளை உடைக்கக்கூடிய அளவிற்கு வேதிவினைகளை வேகப்படுத்தக்கூடிய ஒரு வர்த்தக வினையூக்கி பொருளையும் ஒளியையும் பயன்படுத்துகிறது என்றனர். அந்த நடைமுறையின்போது உருவாகக்கூடிய அமிலங்களைக் கொண்டு ஹைட்ரஜன் போன்ற பசுமை எரிபொருளைத் தயாரிக்க பயன்படுத்த முடியும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மறுசுழற்சி முறை என்பது இயந்திரபூர்வ மறுசுழற்சியைக் குறிப்பிடுகிறது. இந்த முறைப்படி பிளாஸ்டிக்கின் பயன்பாட்டு காலம் குறைக்கப்படுகிறது. மேலும் இயந்திரமயமான மறுசுழற்சி என்பது கழிவுப்பொருள்களை வகைப்படுத்தி, பிரித்தெடுத்து, அவற்றைக் கழுவி சுத்தப்படுத்தி, அதனுடன் வேதிப்பொருள்களைச் சேர்த்து கலந்து அரைத்து மீண்டும் புது வடிவம் கொடுப்பதாகும்.
ஆனால், சிங்கப்பூரின் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக அறிவியல் அறிஞர்கள் கண்டுபிடித்து இருக்கும் தொழில்நுட்பம் மாறுபட்ட ஒன்றாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
மலேசியா டூ சிங்கப்பூர்! அனுமதியின்றி கொண்டுவரப்பட்ட 1600 கிலோ காய்கறிகள் பறிமுதல்!