பிஞ்சுக் குழந்தைகளை தேடித் தேடி கொன்ற நர்ஸ்! இனி வாழ்நாள் முழுக்க அந்தக் கொடுமையை அனுபவிக்கணும்!

பிரிட்டனை உலுக்கிய குழந்தைகள் கொலை வழக்கில் நர்ஸ் லூசி லெட்பிக்கு முழு வாழ்க்கையையும் சிறையில் கழிக்கும் ஆயுள் தண்டனை விதித்து மான்செஸ்டர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

British nurse Lucy Letby imprisoned for life for the murders of 7 babies and attempted murders of 6

வடக்கு இங்கிலாந்தில் உள்ள மருத்துவமனையில் புதிதாகப் பிறந்த குழந்தைகளை கவனிக்கும் செவிலியராகப் பணிபுரிந்த லூசி லெட்பி என்ற நர்ஸ், ஏழு குழந்தைகளைக் கொன்றிருக்கிறார். ஆறு குழந்தைகளைக் கொல்ல முயன்றிருக்கிறார். இந்தக் குற்றத்திற்காக அவருக்கு முழு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் சராசரியாக 16.5 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிப்பார்கள். ஆனால், முழு ஆயுள் தண்டை விதிக்கப்பட்ட கைதிகள் விடுவிக்கப்படுவதற்கான எந்த வாய்ப்பையும் கிடையாது. ஏனெனில் விடுவிக்கக் கோரினாலும் அந்தக் கோரிக்கையை மறு ஆய்வு செய்யும் பரோல் வாரியம் அதை ரத்து செய்யும்.

இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பளித்த நீதிபதி ஜேம்ஸ் காஸ், லூசி லெட்பி இனி முழு வாழ்க்கையையும் சிறையில் கழிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இது பிரிட்டிஷ் சட்டத்தின் கீழ் அளிக்கப்படும் மிகக் கடுமையான தண்டனை ஆகும்.

ஐலோ! பான்ஹப் ஆபாசப் பட நிறுவனத்தின் பெயர் மாற்றம்! புது பேருக்கு அர்த்தம் என்னன்னு தெரிஞ்சா ஷாக் ஆயிருவீங்க!

33 வயதான செவிலியர் லூசி லெட்பி செய்திருக்கும் குற்றம் மிகப்பெரிய நம்பிக்கை மீறல் என்றும் திட்டமிட்ட, தந்திரமான செயல் என்று நீதிபதி கோஸ் தனது தண்டனைக் குறிப்புகளில் குறிப்பிட்டுள்ளார்.

2015ஆம் ஆண்டு ஜூன் முதல் 2016ஆம் ஆண்டு ஜூன் வரை லூசி லெட்பி வடமேற்கு இங்கிலாந்தில் உள்ள கவுண்டஸ் ஆஃப் செஸ்டர் மருத்துவமனையில் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் பிரிவில் பணிபுரிந்துள்ளார். நீதிமன்றத்தில் காவல்துறையினரால் சமர்ப்பிக்கப்பட்ட சாட்சியங்களில் கொலை தொடர்பாக லூசி எழுதிய பல குறிப்புகளும் இருந்தன.

சுமார் 70 கிரிமினல்கள் தற்போது இங்கிலாந்தில் முழு ஆயுள் தண்டை பெற்ற சிறையில் இருக்கின்றனர். இதற்கு முன்னர் மூன்று பெண்களுக்கு மட்டுமே இந்த அதிகபட்ச தண்டனை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது எங்க ஏரியா... இங்க சிகரெட் பிடிப்போம், தண்ணி அடிப்போம்... அதை கேக்க நீங்க யாரு? மாணவியின் தெனாவட்டு பேச்சு

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios