ஐலோ! பான்ஹப் ஆபாசப் பட நிறுவனத்தின் பெயர் மாற்றம்! புது பேருக்கு அர்த்தம் என்னன்னு தெரிஞ்சா ஷாக் ஆயிருவீங்க!
ஐலோ (Aylo) என்று பெயர் மாறியிருக்கும் மைண்ட் கீக் (MindGeek) நிறுவனம் PornHub, YouPorn உள்ளிட்ட ஆபாச வீடியோ இணையதளங்களை நடத்துகிறது.
பார்ன்ஹப் (Pornhub) ஆபாச வீடியோ இணையதளத்தை நடத்தும் மைண்ட் கீக் (MindGeek) நிறுவனம் ஐலோ (Aylo) என்ற புதிய பெயருக்கு மாறியுள்ளது. மைண்ட் கீக் நிறுவனம் புதிய தொடக்கத்தை எதிர்நோக்கி தனது பெயரை மாற்ற முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
"நிறுவனத்திற்கு ஐலோ (Aylo) என மறுபெயரிடும் முடிவு, ஒரு புதிய தொடக்கத்திற்கு வழிவகுக்க வேண்டும். புதுமையான, மாறுபட்ட வயதுவந்தோருக்கான உள்ளடக்கங்களை (Contents) உருவாக்க வேண்டும். அதே சமயத்தில் நம்பகத்தன்மை மற்றும் பாதுகாப்பையும் உறுதிசெய்ய வேண்டும்" என்று அந்த நிறுவனம் அறிக்கையில் ஒன்றில் தெரிவித்துள்ளது. மைண்ட் கீக் உடனடியாக ஐலோ என்ற பெயருக்கு கூறப்பட்டுள்ளது.
'ஐலோ' என்றால் என்ன?
'ஐலோ' என்ற பெயர் ஏன் வந்தது என்பது குறித்து, அந்த நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் விளக்கியுள்ளார், இந்த வார்த்தைக்கு அர்த்தம் இல்லாததாலும், அகராதியில் காணப்படாததாலும் இந்த வார்த்தை தேர்ந்தெடுக்கப்பட்டது என்று கூறியிருக்கிறார்.
"நாங்கள் ஒரு புதிய ஆரம்பத்தை விரும்புகிறோம். எனவே எங்களுக்கு அந்த சுதந்திரத்தை வழங்கும் ஒரு பெயரை நாங்கள் தேர்ந்தெடுத்திருக்கிறோம். இதன் மூலம் எங்கள் குழு எப்படி செயல்பட விரும்புகிறோம் என்பதைக் கூறமுடியும்" என்று அவர் தெரிவித்துள்ளார். புதிய பிராண்டிங் மற்றும் லோகோ விரைவில் அனைத்து நிறுவன தகவல் தொடர்பு மற்றும் டிஜிட்டல் தளங்களில் வெளிவரும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
வாட்ஸ்அப்பில் போட்டோ அனுப்ப இன்னொரு புதிய வசதி! இனி கேம்ப்ஷனையும் எடிட் பண்ணலாம்?
பான்ஹப் (Pornhub) இணையதளத்தின் தாய் நிறுவனத்தை கனடாவைச் சேர்ந்த எத்திகல் கேப்டல் பார்ட்னர்ஸ் (Ethical Capital Partners) என்ற நிறுவனம் இந்த ஆண்டு மார்ச் மாதம் வாங்கியது. ரகசியமாக நடைபெற்ற இந்த கைமாற்றத்தில் MindGeek நிறுவனத்தை வசப்படுத்த இவ்வளவு தொகை கொடுக்கப்பட்டது என்பது இன்னும் வெளிவராத மர்மமாகவே உள்ளது.
PornHub என்ற சிக்கலான பிராண்ட்
சமீபத்திய ஆண்டுகளில், பான்ஹப் பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளது. இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் சமூக வலைத்தளங்களில் பார்ன்ஹப் நிரந்தரமாகத் தடைசெய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், அமெரிக்காவில் உட்டா மற்றும் விர்ஜினியா உள்ளிட்ட சில மாகாணங்களில் பார்ன்ஹப் தளத்தின் பார்வையிட முடியாத நிலைக்குச் சென்றது. பயனர்கள் அனைவரும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பதைச் சரிபார்க்க வேண்டும் என்ற சட்டத்தை அரசு விதித்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
2020ஆம் ஆண்டில், சட்டவிரோதமான உள்ளடக்கங்கள் இருப்பதன் காரணமாக விசா மற்றும் மாஸ்டர்கார்டு ஆகியவை பார்ன்ஹப்பில் பேமெண்ட் சேவைகள் வழங்குவதை நிறுத்தின.
ஐலோ (Aylo) என்று பெயர் மாறியிருக்கும் மைண்ட் கீக் (MindGeek) நிறுவனம் PornHub மட்டுமின்றி YouPorn உள்ளிட்ட வேறு சில வயதுவந்தோருக்கான இணையதளங்களையும் நடத்திவரும் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஃபெராஸ் அன்டூன் மற்றும் சிஓஓ டேவிட் டாசில்லோ ஆகியோர் 2022ஆம் ஆண்டின் மத்தியில் பதவி விலகினார்கள்.