நடுக்கடலில் தீப்பற்றிய சரக்குக் கப்பல்! நெருப்பில் நாசமாகும் 3000 சொகுசு கார்கள்!
தீப்பற்றி எரியும் கப்பலில் சுமார் 300 மெர்சிடிஸ் பென்ஸ் கார்கள் உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மெர்சிடஸ் பென்ஸ், பி.எம்.டபிள்யூ, உட்பட கிட்டத்தட்ட 3,000 கார்களுடன் சென்ற சரக்குக் கப்பல் நெதர்லாந்து அருகே நடுக்கடலில் தீப்பற்றியது. தொடர்ந்து இரண்டாவது நாளாக எரியும் தீயை நெதர்லாந்து கடலோரக் காவல்படை போராடி கட்டுப்படுத்தியுள்ளது.
ஃப்ரீமண்டில் ஹைவே என்ற சரக்குக் கப்பலில் புதன்கிழமை நள்ளிரவுக்குப் பிறகு தீ பரவியுள்ளது. இதில் அதில் பணிபுரிந்த பணியாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரையும் காயமடைந்த 23 ஊழியர்களையும் ஹெலிகாப்டர்கள் மற்றும் உயிர் காக்கும் படகுகள் மூலம் கப்பலில் இருந்து அழைத்துச் சென்றுவிட்டதாக நெதர்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆம்ஸ்டர்டாம் நேரப்படி வியாழன் அன்று காலை 8:30 மணிக்கு தீ இன்னும் எரிகிறது என்றும் தீ அணைக்கப்பட்ட பின்னரே கப்பலில் உள்ள வாகனங்களை மீட்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் நெதர்லாந்து தரப்பில் கூறப்பட்டுள்ளது.
திருட்டில் தொடங்கிய காதல் கதை! மொபைலை அபேஸ் செய்த நபருடன் காதலில் விழுந்த பெண்!
"தீயை அணைத்தாலும் கப்பலில் தண்ணீர் புகுந்திருப்பதால் கப்பலுக்குள் நுழைவதில் பிரச்சனை ஏற்படலாம்" என்று கூறிய கடலோர காவல்படையினர், தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்றும் சொல்கின்றனர்.
ஜப்பானிய நிறுவனமான ஷூய் கிசென் கைஷாவுக்குச் சொந்தமான கப்பலான ஃப்ரீமண்டில் ஹைவே, எகிப்தின் போர்ட் சைட் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அதற்கு முன் ஜெர்மன் துறைமுகமான ப்ரெமர்ஹேவனில் நிறுத்தப்பட்டது. இந்தக் கப்பல் இறுதியாக சிங்கப்பூர் செல்ல இருந்தது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
விசா விவகாரம்... கடைசி நேரத்தில் கழுத்தறுத்த சீனா! இந்திய வுஷூ அணியின் சீனப் பயணம் திடீர் ரத்து!
கப்பலில் இருந்த 2,857 கார்களில் இருபத்தைந்து கார்கள் மின்சார வாகனங்கள் என்று நெதர்லாந்து கடலோர காவல்படையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அவற்றில் ஒன்று தீப்பிடித்து விபத்து நேர்ந்திருக்கலாம். கப்பலில் இருந்து எரிபொருள் கசிவு ஏற்பட்டுள்ளதா என்பதை கடலோர காவல்படையால் உறுதிப்படுத்த முடியவில்லை. இந்தத் தீ பல நாட்கள் நீடிக்கக்கூடும் என்றும் சொல்கின்றனர்.
கப்பலில் இருந்த சுமார் 300 கார்கள் மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டவை. பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் கார்களும் கப்பலில் இருப்பதாக அந்நிறுவனம் சொல்கிறது. ஆனால், எத்தனை கார்கள் என்று சொல்லவில்லை. போர்டு, ஸ்டெல்லண்டிஸ், ரெலான்ட், நிஸ்ஸான், பிஎம்டபிள்யூ ஆகிய நிறுவனங்களின் கார்கள் ஏதும் அந்தக் கப்பலில் இல்லை என்று அந்த நிறுவனங்களின் செய்தித் தொடர்பாளர்கள் தெரிவித்துள்ளனர். டொயோட்டா நிறுவன அதிகாரிகளும் தங்கள் வாகனம் ஏதும் கப்பலில் இருந்திருக்க வாய்ப்பில்லை என்று கூறியுள்ளனர்.
வோக்ஸ்வாகன் நிறுவன செய்தித் தொடர்பாளர், இந்த விஷயத்தை தீவிரமாக விசாரித்து வருவதாகக் கூறியுள்ளது. ஆனால், கூடுதல் தகவல்களை வழங்கவில்லை. டெஸ்லா நிறுவனம் தங்கள் கார்கள் கப்பலில் இருந்ததா என்பதற்கு பதிலளிக்கவில்லை.
சிங்கப்பூரில் போதைப் பொருள் கடத்திய பெண்ணுக்குத் தூக்கு! 20 ஆண்டுகளில் இதுதான் முதல் தடவை!