China Plane Crash: சீன விமானம் விபத்துக்குள்ளானது எப்படி..? தேடப்பட்டு வந்த கருப்புப்பெட்டி கண்டெடுப்பு..

சீனாவில் மலைப் பகுதியில் மோதி விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 

Black box found in Chinese plane crash

சீனாவில் மலைப் பகுதியில் மோதி விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சீனாவின் தென்மேற்கு மாகாணமான யுன்னான் தலைநகர் குன்மிங்கிலிருந்து குவாங்ஜோ நோக்கி சென்ற போயிங் 737 ரக விமானம் ஹீஜோ நகரத்துக்கு உள்பட டெங்ஷியான் மலைப் பகுதியில் கடந்த திங்கள்கிழமை உள்ளூர் நேரப்படி மதியம் 2.20 மணிக்கு விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 132 பேரும் பலியானதாக சீன அரசு அறிவித்தது.

Black box found in Chinese plane crash

மேலும் 3,225 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து நொறுங்கியதால், பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. அப்பகுதி முழுவதும் கடும் புகை மண்டலமாக காட்சியளித்தது. விமானத்தின் பாகங்கள் அங்கும் இங்குமாக சிதறி கிடக்கும் புகைப்படங்கள் , காட்சிகளும் வெளியாகின. சீனாவில் கடைசியாக கடந்த 2010 ஆம் ஆண்டு E-190 ஜெட் விமானம் விபத்துக்குள்ளானதில், 44 பேர் உயிரிழந்தனர்.அதன்பின்னர் கடந்த திங்கள்கிழமை நடத்த விபத்து தான் பெரிய விபத்தாகக் கருதப்படுகிறது. இந்த விமானத்தில் 122 பயணிகளும், 11 பேர் விமான பணியாளர்களும் இருந்துள்ளனர். 

மேலும் படிக்க: plane crash in china: சீனாவில் 133 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்து: மலைப்பகுதி காட்டுத்தீ காரணமா?

மேலும் விபத்துக்குள்ளான விமானம் 3.05 மணிக்கு தரையிறங்கிருக்க வேண்டும். ஆனால் விமான நிலையத்துடனான தொடர்பை இழந்ததால், அவசர செய்தி அனுப்பட்டு , தேடுதல் பணி நடைபெற்ற நிலையில் விமானம் விபத்துக்குள்ளானது தெரியவந்தது. மலை பகுதியில் விழுந்து நொறுக்கி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகளும் காட்டுத்தீ காட்சிகளும் வெளியாகின. சரியாக 2.15 மணிக்கு விமானம் தலைகுப்புற விழுந்துள்ளதாகவும் 29,100 அடி உயரத்தில் இருந்து விமானம் 9,075 அடி உயரத்திற்கு சரிந்துள்ளது என்றும்  தெரிவிக்கப்பட்டன. பின்னர், அடுத்த 20 வினாடிகளில் 3, 225 அடிக்கு சரிந்து, பிறகு தொடர்பிலிருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Black box found in Chinese plane crash

சீன அதிபர் ஜி சின்பிங் விபத்து குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன. விமான விபத்து ஏற்பட்ட மலைபகுதிக்கு மீட்புக்குழுவினர் மீட்பு பணியில் ஈடுப்பட்டனர். விபத்திற்கான காரணங்களை அறிய கருப்புப் பெட்டி அவசியம் என்பதால் அதை இரண்டு நாள்களாகத் தேடி வந்த நிலையில், இன்று விமானத்தின்  இரண்டு கருப்புப் பெட்டிகளில்  ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.விபத்து நடப்பதற்கு முன் விமானிகள் பேசிய பதிவை வைத்து விபத்திற்கான காரணம் உறுதிபடுத்தப்படும் என்பதால் மேலும் ஒரு கருப்புப் பெட்டியை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

மேலும் படிக்க: China Plane Crash:தலைக்குப்புற விழுந்து விபத்து..தொடர்பில் இருந்து விலகிய கடைசி நொடிகள்..வெளியான முக்கிய தகவல்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios