China Plane Crash:தலைக்குப்புற விழுந்து விபத்து..தொடர்பில் இருந்து விலகிய கடைசி நொடிகள்..வெளியான முக்கிய தகவல்

China Plane Crash: சீன விமானம் சரியாக 2.15 மணியளவில் தலைகுப்புற விழுந்து விபத்துக்குள்ளானதாகவும் 29,100 அடி உயரத்தில் பறந்துக்கொண்டிருந்த விமானம் 3, 225 அடிக்கு சரிந்து,பிறகு தொடர்பிலிருந்து விலகியதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

Important information about the Chinese plane crash

China Plane Crash: சீன விமானம் சரியாக 2.15 மணியளவில் தலைகுப்புற விழுந்து விபத்துக்குள்ளானதாகவும் 29,100 அடி உயரத்தில் பறந்துக்கொண்டிருந்த விமானம் 3, 225 அடிக்கு சரிந்து,பிறகு தொடர்பிலிருந்து விலகியதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

சீன விமானம் விபத்து:

தெற்கு சீனாவில் குன்மிங்கிலிருந்து குவாங்சோவுக்கு  133 பயணிகளுடன் சென்ற சீன ஈஸ்டர்  பேசஞ்சர் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் குவாங்ஸி என்ற மலைப்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. மேலும் 3,225 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து நொறுங்கியதால், பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் அப்பகுதி முழுவதும் கடும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இந்நிலையில் விமானத்தில் பயணம் செய்த 133 பேரும் உயிர் பிழைத்திருக்கக்கூடிய வாய்ப்பு மிக மிக குறைவு என்று சொல்லப்படுகிறது. விமானத்தின் பாகங்கள் அங்கும் இங்குமாக சிதறி கிடக்கும் புகைப்படங்கள் , காட்சிகளும் மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Important information about the Chinese plane crash

மேலும் படிக்க: China Plane Crash: 2 நிமிடத்தில் 30 ஆயிரம் அடி கீழே வந்து விழுந்த விமானம்.. 133 பேர் கதி என்ன.?? கதறும் சீனா.

2010 ஆம் ஆண்டுக்கு பிறகு:

இதனிடயே சீனாவின் கிழக்கு ஏர்லைன்ஸ் நிறுவனம் தனது இணையதளத்தை கறுப்பு வெள்ளையாக மாற்றியுள்ளது. சீனாவில் கடைசியாக கடந்த 2010 ஆம் ஆண்டு E-190 ஜெட் விமானம் விபத்துக்குள்ளானதில், 44 பேர் உயிரிழந்தனர். அதன்பின்னர் இன்று நடந்த விபத்துதான் பெரிய விபத்தாகக் கருதப்படுகிறது. இந்த விமானத்தில் 122 பயணிகளும், 11 பேர் விமான பணியாளர்களும் இருந்துள்ளனர். சீன அதிபர் ஜி சின்பிங் விபத்து குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன. விமான விபத்து ஏற்பட்ட மலைபகுதிக்கு மீட்புக்குழுவினர் விரைந்துள்ளனர். இருப்பினும், விபத்து நடந்த பகுதியில் காட்டுத் தீ பரவிவிட்டதால் மீட்புப் பணிகளில் சிரமம் ஏற்பட்டுள்ளது. 

Important information about the Chinese plane crash

இதனிடையே விபத்துக்குள்ளான இந்த விமானம் சீனாவின் தென்மேற்கு நகரான குன்மிங்கில் இருந்து உள்ளூர் நேரப்படி இன்று மதியம் 1.11 மணியளவில் புறப்பட்டுள்ளது. சரியாக 2.22 மணியளவில் விமானம் 3,225 அடி உயரத்தில் 376 நாட் வேகத்தில் பறந்து கொண்டிருந்தது. ஆனால், அடுத்த நொடி ரேடார் கண்காணிப்பில் இருந்து விமானம் விலகியதாக என சீனாவின் விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் ரேடாரிலிருந்து விலகிய அந்த நொடியில்தான் விபத்து நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. 

மேலும் படிக்க: plane crash in china: சீனாவில் 133 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்து: மலைப்பகுதி காட்டுத்தீ காரணமா?

விபத்து குறித்து முக்கிய தகவல்:

மேலும் விபத்துக்குள்ளான விமானம் 3.05 மணிக்கு தரையிறங்கிருக்க வேண்டும். ஆனால் விமான நிலையத்துடனான தொடர்பை இழந்ததால், அவசர செய்தி அனுப்பட்டு , தேடுதல் பணி நடைபெற்ற நிலையில் விமானம் விபத்துக்குள்ளானது தெரியவந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மலை பகுதியில் விழுந்து நொறுக்கி விபத்துக்குள்ளான காட்சிகளும் வெளியாகியுள்ளன. விமானம் விழுந்து நொறுங்கிய சிசிடிவி காட்சிகளும் விமான விபத்துக்குள்ளான மலைப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டிருக்கும் காட்சிகளும் வெளியாகியுள்ளன.

Important information about the Chinese plane crash

சரியாக 2.15 மணிக்கு விமானம் தலைகுப்புற விழுந்துள்ளதாகவும் 29,100 அடி உயரத்தில் இருந்து விமானம் 9,075 அடி உயரத்திற்கு சரிந்துள்ளது என்றும் தகவல் கிடைத்துள்ளது. பின்னர், அடுத்த 20 வினாடிகளில் 3, 225 அடிக்கு சரிந்து,பிறகு தொடர்பிலிருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சீன அதிபர் ஜி சின்பிங் இந்த விபத்து குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும் படிக்க: China Plane Crash: திடீரென கீழே விழுந்து நொறுங்கிய விமானம்..பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சி..

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios