சீன அதிபரை சந்தித்த பில்கேட்ஸ்.. அமெரிக்க சி.இ.ஓக்கள் சீனாவுக்கு செல்ல என்ன காரணம்?

சீனாவிற்கு வருகை தரும் அமெரிக்க தலைமை நிர்வாக அதிகாரிகளின் பட்டியலில் பில் கேட்ஸும் இணைந்தார்.

Bill Gates joins the list of US CEOs to travel to China.

மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் தனது சீனப் பயணத்தின் போது சீன அதிபர் ஜி ஜின்பிங்கை நேற்று சந்தித்தார். அமெரிக்காவின் முக்கிய தலைமை நிர்வாக அதிகாரிகள் சீனாவிற்கு பயணம் மேற்கொண்டு வரும் நிலையில், தற்போது பில் கேட்ஸ் சீனாவிற்கு சென்றுள்ளார். 2019 ஆம் ஆண்டுக்குப் பிறகு பில் கேட்ஸின் முதல் சீனப் பயணம் இதுவாகும். தனது பழைய நண்பரான பில் கேட்ஸை பார்த்ததில் மகிழ்ச்சி அடைவதாக ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார். சீன-அமெரிக்க உறவுகளின் அடித்தளம் மக்களிடம் உள்ளது என்று ஜி ஜின்பிங் பில்கேட்ஸிடம் கூறியுள்ளார். அதே போல், சீன அதிபரை சந்தித்தது மிகவும் பெருமையாக இருப்பதாக பில்கேட்ஸ் ஜின்பிங்கிடம் தெரிவித்தார்.

முன்னதாக இந்த மாத தொடக்கத்தில், டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் சீனாவிற்கு பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது அவர் சீனாவின்  உயர் அதிகாரிகளைச் சந்தித்து, நாட்டின் தொழில்நுட்ப வளர்ச்சியைப் பாராட்டினார். மேலும் ஷாங்காய் டெஸ்லாவின் தொழிற்சாலையையும் பார்வையிட்டார்.

மார்ச் மாதம், ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் சீனாவிற்கு சென்றிருந்தார்.  இந்த பயணத்தின் போது, ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி சீனாவின் பிரபலமான சமூக ஊடக தளத்திலும் இணைந்தார். குக் பெய்ஜிங்கில் உள்ள ஆப்பிள் ஸ்டோருக்கும் சென்றிருந்தார்.

வியட்நாம் போர்: பென்டகன் ஆவணங்களை கசியவிட்டு.. அமெரிக்காவை பயமுறுத்திய டேனியல் எல்ஸ்பெர்க் மறைவு

அதே போல் இன்டெல்லைச் சேர்ந்த பேட்ரிக் கெல்சிங்கர், ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் மேரி பார்ரா, பிளாக்ஸ்டோன் நிறுவனத்டின் ஸ்டீபன் ஸ்வார்ஸ்மேன் மற்றும் ஜேபி மோர்கான் நிறுவனத்தின் ஜேமி டிமன் ஆகியோரும் சமீபத்தில் சீனாவிற்கு பயணம் செய்தனர்.

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான அரசியல் மற்றும் வர்த்தக பதட்டங்கள் அதிகரித்துள்ளதால், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் தலைமை நிர்வாக அதிகாரிகளும் அவர்களின் நிறுவனங்களும் சீனாவுக்கான பயணங்கள் பற்றிய தகவல்களைப் பகிர்வதில் எச்சரிக்கையாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவை தற்போது தசாப்தங்களில் மிகக் குறைந்த நிலையில் உள்ளன.

அமெரிக்கா – சீனா இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் நாளை சீனாவுக்கு பயணம் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெலாரஸில் ரஷ்ய அணு ஆயுதங்கள்! மேற்கத்திய நாடுகள்ளுக்கு ரஷ்ய அதிபர் புடின் எச்சரிக்கை!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios