பெலாரஸில் ரஷ்ய அணு ஆயுதங்கள்! மேற்கத்திய நாடுகள்ளுக்கு ரஷ்ய அதிபர் புடின் எச்சரிக்கை!
உக்ரைன் ரஷ்யா போரின் நடுவே, உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் ஆதரவுதெரிவித்துள்ளன. அந்நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், ரஷ்ய அணு ஆயுதங்கள் பெலாரஸில் நிறத்தி வைக்கப்பட்டுள்ளது.
உக்ரைன்- ரஷ்யா நாடுகள் இடையிலான போர் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. உக்ரைனின் பெரும்பாலான இடங்களை ரஷ்யா ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படுகிறது. அதை மீட்பதற்காக உக்ரைன் ராணுவம் தற்போது எதிர்தாக்குதல் நடத்தி வருகிறது. டிரோன் மூலம் தாக்குதல் நடத்துவதால் ரஷ்ய பகுதியில் சேத்திற்குள்ளாகியுள்ளது. உக்ரைன் பதில்தாக்குதலை கட்டுப்படுத்த, ரஷ்யா மீண்டும் ஏவுகணை தாக்குதல்களை தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், ஆப்பிரிக்க தலைவர்கள் உக்ரைன் நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி ஆதரவு தெரிவித்துள்ளனர். பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும்போது கிவ் நகர் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உக்ரைன் எல்லையில் தெற்கில் ஒரு குறிப்பிட்ட இடத்தை பிடித்து பாதுகாப்பான பகுதியாக வைத்துக் கொள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் திட்டமிட்டுள்ளார். உக்ரைன் போர் தொடங்கியதிலிருந்தே பெலாரஸ் ரஷ்யாவுக்கு உதவி செய்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
உக்ரைன் நாட்டிற்கு ஆயுதங்கள் வழங்கி ரஷ்யாவை தோற்கடிக்க வேண்டும் என மேற்கத்திய நாடுகள் விரும்புகின்றன. இதனால் பெலாரஸில் அணுஆயுதங்களை நிலைநிறுத்த ரஷ்ய அதிபர் புதின் முடிவு செய்தார். அதனை, பெலாரஸ் நாட்டு அதிபரும் சம்மதிக்க அதற்கான ஏற்பாட்டை தயார் செய்து வருகிறது ரஷ்யா. அடுத்த மாதம் 7-ம் தேதியிலிருந்து பெலராஸில் அணுஆயுதங்கள் நிலைநிறுத்தப்படும் என ரஷ்ய நாட்டு அதிபர் புடின் தெரிவித்திருந்தார்.
வியட்நாம் போர்: பென்டகன் ஆவணங்களை கசியவிட்டு.. அமெரிக்காவை பயமுறுத்திய டேனியல் எல்ஸ்பெர்க் மறைவு
இந்நிலையில் அணுஆயுதங்கள் பெலாரஸ்க்கு அனுப்பப்பட்டுள்ளது. பெலாரஸில் அணுஆயுதங்களை நிலைநிறுத்துவதே, மேற்கத்திய நாடுகளை எச்சரிக்கை செய்வதற்காகத்தான் என ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார். ஏற்கனவே பெலராஸ் நாட்டிற்கு அணுஆயுதங்களை அனுப்பும் பணி தொடங்கிவிட்டது. இருந்தாலும், தற்போது உக்ரைனுக்கு எதிராக அவற்றை பயன்படுத்தும் தேவை இருக்காது. முதல் அணுஆயுத தடவாளங்கள் அனுப்பப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் ஒப்பந்தம் செய்யப்பட்ட அணுஆயுதங்கள் பெராஸ் நாட்டிற்கு அணுப்பும் வேலை முழுமையாக முடிவடையும் என்றும் அதிபர் புடின் தெரிவித்துள்ளார்.