Asianet News TamilAsianet News Tamil

ஓய்வு பெற்றது உலகப்புகழ் பெற்ற 'பிக் பென்' கடிகாரம் - 2021 வரை ஓடாதாம்!!!

big ben stopped due to maintenance works
big ben stopped due to maintenance works
Author
First Published Aug 15, 2017, 10:21 AM IST


பிரிட்டன் நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள உலகப்புகழ் பெற்ற பிக் பென் கடிகாரம் பராமரிப்பு பணிகள் காரணமாக 2021-ம் ஆண்டு வரை ஓடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டன் நாடாளுமன்ற வளாகத்தில் 1859-ம் ஆண்டு பிக்பென் என்று அழைக்கப்படும் ராட்சத கடிகாரம் திறக்கப்பட்டது. கடந்த 157 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த கடிகாரம் பராமரிப்பு பணிகளுக்காக அவ்வப்போது நிறுத்தப்படுவது வழக்கம்.

அதன்படி, அந்த கடிகாரத்தில் பராமரிப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும் அந்த கடிகாரம் அமைந்த எலிசபெத் கோபுரத்தில் மராமத்துப் பணி மேற்கொள்ளவும் பிரிட்டன் அரசு முடிவு செய்துள்ளது. இதற்கென தனியாக நிபுணர் குழுவும் அமைக்கப்பட்டது. 

big ben stopped due to maintenance works

அதன்படி அந்தப் பராமரிப்புக் குழு அடுத்த வாரம் முதல் தனது பணியைத் தொடங்கவுள்ளது. இதையடுத்து, கடிகாரத்தின் செயல்பாடு வரும் திங்கள்கிழமை முதல் நிறுத்தப்படுவதாகவும், வரும் 2021-ஆம் ஆண்டு வரை கடிகாரம் இயங்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மராமத்துப் பணிகளுடன் எலிசபெத் கோபுரத்தில் சுற்றுலாப் பயணிகளையும், பராமரிப்புப் பணியாளர்களையும் ஏற்றிச் செல்ல உதவும் தானியங்கி லிப்ட், சமையலறை, கழிப்பறைகள் அமைக்கப்பட உள்ளன என்று பராமரிப்பு நிபுணர்கள் கூறியுள்ளனர்.
நான்கு ஆண்டுகள் கடிகாரம் நிறுத்தப்பட்டாலும், ஆங்கில புத்தாண்டு தினத்தை அறிவிக்கும் விதமாக கடிகாரம் மணியடிக்கச் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios