Jaishankar: இந்தியாவின் குரல் உலகளவில் கவனிக்கப்பட பிரதமர் மோடியே காரணம்! மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பெருமிதம்
இந்தியாவின் குரல் உலகளவில் கவனிக்கப்படுவதற்கும், பேசப்படுவதற்கும் காரணம் பிரதமர் மோடிதான் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பெருமித்ததோடு தெரிவித்தார்.
இந்தியாவின் குரல் உலகளவில் கவனிக்கப்படுவதற்கும், பேசப்படுவதற்கும் காரணம் பிரதமர் மோடிதான் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பெருமித்ததோடு தெரிவித்தார்.
ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்க மத்திய வெளியுறவுத்துறைஅமைச்சர் ஜெய்சங்கர் அமெரி்க்காவின் நியூயார்க் நகரம் சென்றுள்ளார். ஐ.நா. கூட்டத்தின் இடையே பல்வேறு உலகத் தலைவர்கள் ஜெய்சங்கர் சந்தித்துப் பேசினார்.
அதன்பின் இந்தியா-அமெரிக்கா நட்புறவு கவுன்சில் மற்றும் இந்தியா மற்றும் இந்தியவம்சாவளியினர் கல்விக்கான அறக்கட்டளை(எப்ஐடிஎஸ்) சார்பில் சந்திப்பு நடந்தது. அதில் ஜெய்சங்கர் பேசியதாவது:
ஐ.நா. சபை கூட்டத்தில் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் தலைவர்களைச் சந்திக்க முடிந்தது.
இந்தியாவின் குரல் உலகளவில் பேசப்படுகிறது, உலகஅரங்கில் தீவிரமாக ஆலோசிக்கப்படுகிறது, மதிப்பளிக்கப்படுகிறது. இதற்கு காரணம் பிரதமர் மோடி, அவரின் தலைமையும், கொள்கைகளும்தான்.
உலகளவில் இந்தியாவின் கருத்துக்கள் கேட்கப்படுகின்றன, எங்கள் எண்ணங்களுக்கு மதிப்பளிக்கப்படுகின்றன. எந்தவிதமான முக்கிய பிரச்சினையும் இந்தியா எழுப்பினால் கவனிக்கப்படுகிறது.
கடந்த 6 நாட்களாக நடந்த கலந்துரையாடலில் மிக, மிக முக்கியமானதாக பேசப்பட்டதாக நான் நினைக்கிறேன்.
ரஷ்யா, அமெரிக்காவுக்கு ஆப்பு.. சீனா அரசியல் சாசனத்தை மாற்றியவர் - யார் இந்த சீனா அதிபர் ஜி ஜின்பிங் ?
உலகளவில் பெரிய மோதல் பெரிய அலையைஏற்படுத்தும் என்பது உலகின் இயல்பாக இருக்கிறது. உலகளவில் மக்கள் எரிபொருளுக்காகவும், உணவுக்காகவும்தான் அதிகம் அலைகிறார்கள். இந்த மோதலுக்கு வெவ்வேறு அம்சங்கள் காரணமாக இருக்கலாம். முன்பேகூட பேசப்பட்டிருக்கலாம்.
எனது பதவிக்காலத்தில், நான் தூதராகஇருந்த காலத்தில், நான் கண்ட மிகப்பெரிய மாற்றம் என்பது, பெருமையாக நினைப்பது என்னவெனில் இந்தியா-அமெரிக்க உறவில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம்,முன்னேற்றம்தான்.
இந்திய வம்சாவளி அமெரிக்கர்கள், இரு நாடுகளுக்கும் இடையே பாலமாக விளங்குகிறார்கள். இருநாடுகளின் நட்புறவு சாதகமாக மாறுவதற்கும், மலர்வதற்கும் அவர்களும் முக்கியக் காரணம்.
இரு நாடுகளின் நட்புறவை வலுப்படுத்துவதில் இந்திய வம்சாவளி அமெரிக்கர்கள் பங்கு இவ்வளவுதான் என்று என்னால் வரையரை செய்து கூற முடியாது.
கண்ணீர் புகை குண்டுகளை வீசிய போலீசார்… போராட்டக்காரர்களை கலைக்க அதிரடி நடவடிக்கை!!
இருநாட்டு அரசுகளின் கொள்கைகளால் மட்டும் நட்புறவு மேம்பட்டது என்று முழுமையாகக் கூற முடியாது, அதற்கு முக்கியக் காரணம் இந்திய அமெரிக்கர்கள்தான்.
இவ்வாறு ஜெய்சங்கர் தெரிவித்தார்