எலான் மஸ்க் சிறு குழந்தையாக இருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ட்விட்டரில் ஒருவர் பகிர்ந்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் லட்சக் கணக்கானவர்களின் கவனத்தை ஈர்க்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.. அதுவும் எலான் மாஸ் போன்ற முக்கிய நபரின் புகைப்படம் என்றால் சொல்லவா வேண்டும். ஆம். எலான் மஸ்க் சிறு குழந்தையாக இருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ட்விட்டரில் ஒருவர் பகிர்ந்துள்ளார். K10 என்ற ட்விட்டர் பயனரால் இந்த புகைப்படம் பகிரப்பட்டது. அந்த பதிவில் "கார் ஃபார்ட்டின் கண்டுபிடிப்பாளராகி, செவ்வாய் கிரகத்தை இலக்காகக் கொண்டு, எலக்ட்ரிக் கார்களை உலகெங்கிலும் உள்ள சாலைகளில் தினமும் காணக்கூடியதாக மாற்றும் குழந்தை. எலான் பேபி" என்று குறிப்பிட்டுள்ளார். 

Scroll to load tweet…

தனது குழந்தை பருவப் புகைப்படங்களில் ஒன்றிற்கு பதிலளித்ததன் மூலம் எலான் மஸ்க் கவனத்தை ஈர்த்து வருகிறார். தனது குழந்தை புகைப்படத்திற்கு பதிலளித்த எலான் "நான் பைத்தியக்காரத்தனமாக இருக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒரே ஒரு ஃபேமஸ் டிரிங்க் மூலம் தினமும் 24 லட்சம் வருவாய் ஈட்டும் பிரபல ஹோட்டல்..

அந்த புகைப்படம் ஒரு வயதுக்கு குறைவான வயதில் எடுக்கப்பட்ட படம் என்று தெரிகிறது. அந்த படம் வைரலானவுடன், இணைய பயனர்கள் அவரை "அழகான குழந்தை" என்று வர்ணித்து, கமெண்ட் செய்து வருகின்றனர். அந்த வகையில் பயனர் ஒருவர் " குழந்தையாகவே மிகவும் எச்சரிக்கையாக இருக்கிறீர்கள்! அழகாக இருக்கிறீர்கள்," என்று குறிப்பிட்டுள்ளார்.

மற்றொருவர், "அழகானவர். மற்றவர்களுக்குத் தெரியாத விஷயங்களில் உங்களுக்கு தெளிவான பார்வை இருந்தது என்று நான் பந்தயம் கட்டினேன்." ஒரு சமூக ஊடக பயனர் எழுதினார், " நீங்கள் உலகத்தைப் பற்றி மேலும் அறிய மிகவும் ஆர்வமாகவும் இருக்கிறீர்கள்." என்று குறிப்பிட்டுள்ளார். ஜூலை 8 அன்று பகிரப்பட்ட ட்வீட் இதுவரை 1.9 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது..

முன்னதாக, எலான் மஸ்க்கின் குழந்தை பருவத்தில் எப்படி இருந்திருப்பார் என்று AI-உருவாக்கப்பட்ட படம் இணையத்தில் கவனம் பெற்றது. அந்த புகைப்படம் டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரியை குழந்தை பருவத்தில் சித்தரித்தது. உலகெங்கிலும் உள்ள சமூக ஊடக பயனர்கள் எலான் மஸ்க்கின் சிறு வயது புகைப்படத்தை பார்த்து, ஆச்சர்யத்தில் ஆழ்ந்து wow என்று பதிவிட்டு வந்தனர்.

Scroll to load tweet…

அந்த படத்தை பகிர்ந்த ட்விட்டர் பயனர் ஒருவர், எலான் மஸ்க், ஆண்டி - ஏஜிங் ஃபார்முலாவில் வேலை செய்து வருவதாகவும், அது எதிர்பாராத திருப்பத்தை கொடுத்ததாகவும் பதிவிட்டிருந்தார். தனது விரைவான புத்திசாலித்தனமா பதிலுக்கு பெயர் பெற்ற எலான் மஸ்க், "நண்பர்களே, நான் ஆண்டி ஏஜிங் ஃபார்முலாவை அதிகமாக எடுத்துக்கொண்டிருக்கலாம் என்று நினைக்கிறேன்," என்று பதிலளித்தார். அவரின் இந்த பதில் அவரைப் பின்தொடர்பவர்களை மகிழ்வித்தது மட்டுமல்லாமல் வைரலாகவும் பரவியது, 4 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தனது சொந்த தந்தையை திருமணம் செய்த மகள்? வைரலாகும் வீடியோ.. ஆனால் உண்மை என்ன?