ஒரே ஒரு ஃபேமஸ் டிரிங்க் மூலம் தினமும் 24 லட்சம் வருவாய் ஈட்டும் பிரபல ஹோட்டல்..

ராஃபிள்ஸ் என்ற பிரபல ஹோட்டலின் சிக்னேச்சர் பானமானது 1915 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

A famous hotel earns 24 lakhs daily with just one popular drink..

சிங்கப்பூரில் உள்ள ஒரு ஆடம்பர ஹோட்டல், சிங்கப்பூர் ஸ்லிங் காக்டெய்ல் (Singapore Sling) என்ற பானத்தை விற்பனை செய்வதன் மூலம் ஒரு நாளைக்கு 30,000 டாலர் வருவாய் ஈட்டுகிறது. அதாவது இந்திய மதிப்பில் சுமார் 24 லட்சம் ஆகும். ராஃபிள்ஸ் என்ற பிரபல ஹோட்டலின் சிக்னேச்சர் பானமானது 1915 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. அந்த ஹோட்டலின் வரலாற்றுச் சிறப்புமிக்க Long Bar-ல் Ngiam Tong Boon என்பவரால் இந்த பானம் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னர் அது சிங்கப்பூரின் தேசிய பானமாக மாறியுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இந்த பானம் இப்போது தோராயமாக 29 அமெரிக்க டாலர்க்கு விற்கப்படுகிறது. குறிப்பாக இந்த பார் உச்ச விடுமுறை காலங்களில் ஒரு நாளைக்கு சுமார் 1000 சிங்கப்பூர் ஸ்லிங் பானங்கள் விற்பனை செய்கிறது.

ஒரு உயரமான கண்ணாடியில் பரிமாறப்படும் இந்த காக்டெயில், ஜின், செர்ரி மதுபானம், கோயின்ட்ரூ, பெனடிக்டின், அன்னாசி பழச்சாறு, எலுமிச்சை சாறு, கிரெனடின் மற்றும் அங்கோஸ்டுரா பிட்டர்ஸ் ஆகியவற்றைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள சுற்றுலாப் பயணிகள் இந்த பானத்தைப் பருகுவதற்காக மதுக்கடைக்கு வருகை தருகின்றனர். பொதுவாக பெண்கள் பொது இடங்களில் பெண்கள் மது அருந்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று அப்போது விதிகள் நடைமுறையில் இருந்தன. எனவே மது அருந்துவதற்கு பதில், பெண்கள் அடிக்கடி தேநீர் அல்லது பழச்சாறு குடித்து வந்தனர்.

மற்ற வகைகளை விட இந்த புற்றுநோய் தான் ஆபத்தானது.. ஏன் தெரியுமா? மருத்துவ நிபுணர் விளக்கம்..

ஆனால், Ngiam Tong Boon பழச்சாறு போல தோற்றமளிக்கும் ஒரு காக்டெய்லை உருவாக்க அவர் முடிவு செய்தார், ஆனால் அதில் ஜின், கிரெனடின் மற்றும் செர்ரி மதுபானம் ஆகியவற்றை சேர்த்து கண்டுபிடித்தார். காக்டெய்லின் இளஞ்சிவப்பு நிறம் பெண்மைத் தன்மையை' குறிக்கும் வகையில் இருந்தது. எனவே இது பெண்கள் சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பானம் என்று மக்கள் நினைத்தனர். பின்னர் சிங்கப்பூர் ஸ்லிங் உலகப் புகழ்பெற்ற பானமாக மாறியது. 100 ஆண்டுகளுக்குப் பிறகு தொடர்ந்து சுற்றுலாப் பயணிகளை பட்டியில் ஈர்க்கிறது.

மற்றொரு தனித்துவமான பாரம்பரியம் உள்ளது. இந்த பானத்துடன், விருந்தினர்களுக்கு வேர்க்கடலை பரிமாறப்படுகிறது. மேலும் வேர்க்கடலையின் ஓடுகளை தரையில் வீச ஊக்குவிக்கப்படுகிறது. சிங்கப்பூரில் குப்பை கொட்ட அனுமதி இல்லை என்றாலும், குப்பை கொட்டுவதை ஊக்கப்படுத்தும் ஒரே இடம் இதுதான் என்று அந்த ஹோட்டலின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஹோட்டல் ஒரு காலத்தில் ராணி இரண்டாம் எலிசபெத்தின் இல்லமாக இருந்தது. அவர் முதன்முறையாக 2006ல் அங்கு தங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

செயற்கை இனிப்புகளால் இந்த ஆபத்தான நோய்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.. நிபுணர்கள் எச்சரிக்கை..

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios