Snake Bite : ஒரு பாம்பு இன்னொரு பாம்பை கடிச்சா என்ன ஆகும்? ஷாக்கிங் ரகசியம் இதோ!
what happens if a snake bites another snake : ஒவ்வொரு பாம்பின் விஷமும் தனித்துவமானது. ஒரு பாம்பின் உடலால் அதன் சொந்த இனத்தின் விஷத்தை மட்டுமே முறிக்க முடியும். அப்போ, ஒரு பாம்பு இன்னொரு பாம்பை கடிச்சா என்ன ஆகும்? அந்த கேள்விக்கான பதில் இங்கே.
15

Image Credit : AI Image
what happens if a snake bites another snake
நம்மில் பலருக்கு பாம்புகளைப் பற்றி தெரிந்துகொள்ள ஆர்வம் அதிகம். ஒரு விஷப்பாம்பு மனிதரைக் கடித்தால், உடனடி சிகிச்சை அவசியம். இல்லையென்றால் உயிருக்கே ஆபத்து. ஆனால், ஒரு விஷப்பாம்பு இன்னொரு பாம்பைக் கடித்தால் என்ன ஆகும்? வாங்க பார்க்கலாம்.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்
25
Image Credit : Asianet News
உயிருக்கு ஆபத்தா?
ஒரே இனத்தைச் சேர்ந்த ஒரு பாம்பு, இன்னொரு பாம்பைக் கடித்தால், அதன் உயிருக்கு ஆபத்து இல்லை என்கிறது அறிவியல். பாம்புகளுக்கு இருக்கும் நோய் எதிர்ப்பு சக்திதான் இதற்குக் காரணம் என நிபுணர்கள் கூறுகின்றனர். ஒவ்வொரு பாம்பு இனத்திற்கும், அதன் சொந்த விஷத்தை முறிக்கும் ஆன்டிபாடிகள் உடலில் இயற்கையாகவே இருக்கும்.
35
Image Credit : pexels
நல்ல பாம்பு
அதனால்தான், ஒரு நாகப்பாம்பு மற்றொரு நாகப்பாம்பைக் கடித்தால், வலி மட்டுமே இருக்கும். அந்த விஷம் அதைக் கொல்லாது. பாம்பின் உடலில் இருக்கும் இந்த ஆன்டிபாடிகள், அதன் உயிருக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.
45
Image Credit : Canva
நாகப்பாம்பு கடி
உதாரணமாக, ஒரு நாகப்பாம்பு வேறு இனத்தைச் சேர்ந்த பாம்பைக் கடித்தால், அந்த விஷம் மனிதர்களைப் போலவே கடிபட்ட பாம்பையும் பாதிக்கும். சில சமயங்களில் அந்தப் பாம்பு இறந்து கூட போகலாம். காரணம், ஒவ்வொரு இனத்தின் விஷமும் வேதியியல் ரீதியாக வேறுபட்டது. பாம்பின் உடலுக்கு அதன் சொந்த இனத்தின் விஷத்தை மட்டுமே முறிக்கத் தெரியும்.
Egg Facts : நாட்டுக் கோழி முட்டை ஏன் பழுப்பு நிறத்துல இருக்கு? ப்ராய்லர் ஏன் வெள்ளையா இருக்கு?
55
Image Credit : Asianet News
விஷம்
ஒரு பாம்பு தன்னைத்தானே கடித்துக்கொண்டால் கூட, எந்த ஆபத்தும் இல்லை. பாம்புகள் பொதுவாக ஒன்றையொன்று கடித்துக்கொள்வதில்லை. ஏனெனில், விஷத்தை உருவாக்குவது அவற்றின் உடலுக்கு மிகவும் கடினமான வேலை. இரையைப் பிடிக்க அல்லது தங்களைக் காப்பாற்றிக்கொள்ள மட்டுமே பாம்புகள் விஷத்தைப் பயன்படுத்துகின்றன.
Latest Videos

