தனது சொந்த தந்தையை திருமணம் செய்த மகள்? வைரலாகும் வீடியோ.. ஆனால் உண்மை என்ன?
பாகிஸ்தானில் வீடியோ பதிவு செய்யப்பட்ட சரியான இடம் மற்றும் தேதி ஆகிய விவரங்கள் உறுதியாக தெரியவில்லை.
பாகிஸ்தானிய பெண் ஒருவர் தனது சொந்த தந்தையை திருமணம் செய்து கொண்டு, அவரின் 4-வது மனைவியாக மாறியதாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் வீடியோ பதிவு செய்யப்பட்ட சரியான இடம் மற்றும் தேதி ஆகிய விவரங்கள் உறுதியாக தெரியவில்லை. ஆனாலும், இந்த வீடியோ சமூக ஊடகங்களில் குறிப்பிடத்தக்க கவனத்தைப் பெற்றுள்ளது. மேலும் இந்த வீடியோ பரவலான விவாதங்களுக்கும் பல்வேறு எதிர்வினைகளுக்கும் வழிவகுத்தது. இத்தகைய அசாதாரண திருமணம் குறித்து பயனர்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
ஒரே ஒரு ஃபேமஸ் டிரிங்க் மூலம் தினமும் 24 லட்சம் வருவாய் ஈட்டும் பிரபல ஹோட்டல்..
வீடியோவின் நம்பகத்தன்மை மற்றும் குறிப்பிட்ட விவரங்கள் சரிபார்க்கப்படாத நிலையில், அந்தப் பெண்ணே தனது திருமணத்திற்கான காரணத்தை தெரிவித்துள்ளார். தனது சொந்த தந்தையை தான் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றும், தனது கணவருக்கு தான் 4-வது மனைவி என்று தெளிவுபடுத்தினார். ராபியா என்ற பெயர், பாகிஸ்தான் கலாச்சாரத்தில் நான்காவது மகளாகப் பொதுவாக இணைக்கப்பட்டிருப்பதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
ட்விட்டர் பயனர் ஹமீர் தேசாய் இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இருப்பினும், இந்த வீடியோ மற்றும் அதுதொடர்பான விவாதங்கள் தவறான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை என்பதை அந்த பெண்ணே உறுதிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
வைரலான வீடியோ குறித்து, Alt News இணை நிறுவனரும் உண்மை சரிபார்ப்பவருமான முஹம்மது ஜுபைர் அந்த தகவலை மறுத்துள்ளார். அந்த பாகிஸ்தான் பெண் தனது தந்தையை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றும் ஆனால் பல வலதுசாரி பயனர்களால் தவறான தகவல் பரப்பப்படுகிறது என்றும் தெரிவித்தார்.
யாருடன் திருமணம் என்று பேசப்பட்டதோ அந்த நபர் மூன்று மனைவிகளை விவாகரத்து செய்துவிட்டு 4-வது திருமணம் செய்து கொண்டதாக கூறியுள்ளார். அவர் ஒரு வீடியோவை ட்வீட் செய்துள்ளார், அதில் இந்த விஷயம் தெளிவாகிறது. இந்த வீடியோவில், திருமணமாகி ஆறு வருடங்கள் கழித்து, தனது கணவருக்கு முன்பு மூன்று மனைவிகள் இருந்ததாக தனது குடும்பத்தாரிடம் கூறியதாக அப்பெண் கூறுகிறார்.
எனவே பாகிஸ்தானிய பெண் தனது சொந்த தந்தையை மணந்து, அவருடைய நான்காவது மனைவியானார் என்ற கூற்று தவறானது. தனது தந்தையின் இரண்டாவது மகளான அந்த பெண், தான் திருமணம் செய்து கொண்டது தனது தந்தையை அல்ல என்று தெளிவுபடுத்தியுள்ளார்.