பிபோர்ஜாய் புயலின் விண்வெளி காட்சியை படம் பிடித்த அமீரக வீரர் நெயாடி
ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த விண்வெளி வீரர் சுல்தான் அல் நெயாடி பிபோர்ஜாய் புயலின் விண்வெளி காட்சியை படம்பிடித்து ட்விட்டரில் பகிர்ந்திருக்கிறார்.
பிபோர்ஜாய் சூறாவளி குஜராத்தில் இன்று கரையைக் கடக்கும் நிலையில், சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் விண்வெளி வீரர் ஒருவர் விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட சூறாவளியின் சில வியப்பூட்டும் படங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த விண்வெளி வீரர் சுல்தான் அல் நெயாடி தனது ட்விட்டர் கணக்கில் அரபிக் கடலில் காணப்படும் பிபோர்ஜாய் சூறாவளியின் சில படங்களை வெளியிட்டுள்ளார்.
"எனது முந்தைய வீடியோவில் உறுதியளித்தபடி, அரபிக்கடலில் உருவாகும் #Biparjoy சூறாவளியின் சில படங்கள் இங்கே உள்ளன, அதை நான் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து கடந்த இரண்டு நாட்களில் பதிவு செய்தேன்" என்று அல் நெயாடி தன் பதிவில் கூறியுள்ளார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு, அல் நெயாடி, அரபிக்கடலில் உருவான அதி தீவிரப் புயலான பிபோர்ஜாய் இந்தியக் கடற்கரையை நோக்கிச் நகர்வதைக் காட்டும் வீடியோவைப் பகிர்ந்திருந்தார்.
அத்துடன், "நான் படம்பிடித்த இந்தக் காட்சிகளில் அரபிக் கடலில் புயல் உருவாவதைப் பார்க்கலாம். சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் பல இயற்கை நிகழ்வுகள் பற்றிய தனித்துவமான கண்ணோட்டத்தை வழங்குகிறது. இது வானிலை கண்காணிப்பில் பூமியில் உள்ள நிபுணர்களுக்கு உதவும். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்!" என்று ட்வீட் செய்திருந்தார்.
ரஷ்யா - உக்ரைன் போருடன் ஒப்பிட்டு மம்தா அரசை விமர்சித்த பாஜக தலைவர் அக்னிமித்ரா
பிபோர்ஜாய் புயல் கரையைக் கடப்பதை முன்னிட்டு, 74,000 க்கும் மேற்பட்ட மக்கள் கடலோரப் பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த புயல் இன்று மாலை கட்ச் பகுதியில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் குஜராத் மாநிலத்தின் பல மாவட்டங்களில் ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிண்டியில் கலைஞர் பன்னோக்கு மருத்துவமனையை இன்று திறந்து வைக்கிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்