பிரிஜ் பூஷன் மீது போக்சோ குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை; வழக்கை ரத்து செய்ய வேண்டும்: டெல்லி போலீஸ் அறிக்கை
பிரிஜ் பூஷன் மீது சிறுமி தரப்பில் கொடுத்த பாலியல் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என டெல்லி காவல்துறை நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்திருக்கிறது.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சிங் மீது பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கை ரத்து செய்ய வேண்டும் என டெல்லி போலீசார் நீதிமன்றத்தில் 1,000 பக்க அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். மைனர் மல்யுத்த வீராங்கனை அளித்த பாலியல் குற்றச்சாட்டுக்கு அடிப்படை ஆதாரம் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மைனர் வீராங்கனை ஒருவரின் தந்தையின் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் குற்றசாட்டுக்கு ஆதாரம் கிடைக்காததால் போக்சோ வழக்கினை சட்டப்பிரிவு 173 இன் கீழ் ரத்து செய்ய வேண்டும் என கூறியுள்ளனர். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் அளித்த புகார் குறித்து விசாரணை நடந்திய டெல்லி போலீசார் வியாழக்கிழமை டெல்லி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
டெல்லி போலீசார் நடத்திய விசாரணையின் ஒரு பகுதியாக, இந்தோனேஷியா, பல்கேரியா, கிர்கிஸ்தான், மங்கோலியா மற்றும் கஜகஸ்தான் ஆகிய நாடுகளின் மல்யுத்த கூட்டமைப்புகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அந்த நாடுகளில் நடந்த போட்டியின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள், போட்டியின் போது விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் தங்கியிருந்த ஹோட்டலில் பதிவாகியிருக்கும் சிசிடிவி காட்சிகள் போன்றவை கோரப்பட்டுள்ளன.
இந்நிலையில் பிரிஜ் பூஷன் மீது சிறுமி தரப்பில் கொடுத்த பாலியல் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என டெல்லி காவல்துறை நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்திருக்கிறது. இந்த வழக்கு ஜூலை 4ஆம் தேதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
கடந்த ஜூன் 7ஆம் தேதி விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர், மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக், மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ஆகியோரைச் சந்தித்துப் பேசினார். அந்தச் சந்திப்புக்குப் பின், ஜூன் 15ஆம் தேதிக்குள் விசாரணை முடிக்கப்பட்டு, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று உறுதி அளித்தார். மேலும், ஜூன் 30ஆம் தேதி மல்யுத்த கூட்டமைப்புக்கான தேர்தல் நடத்தப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
சிறப்பாக முதலிரவு கொண்டாட பேனர்! புது மாப்பிள்ளைக்கு இலங்கை, துபாய், கத்தார் நண்பர்கள் வாழ்த்து