உண்மை சொன்னால் அதோ கதிதான்... கொரோனாவை விட கொடூர முகத்தை காட்டும் சீன அரசு..!
சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் ஹுபேய் மாகாணம் வுகான் நகரத்தில் முதன்முதலாக பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு 1,113 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 44 ஆயிரத்து 113 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்திருந்தது. ஆனால், இந்த வைரஸ் நோய்க்கு பல ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாகவும், லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியானது.
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலை உலகுக்கு அம்பலப்படுத்திய இளம் பத்திரிகையாளர் ஒருவர் மாயமாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் ஹுபேய் மாகாணம் வுகான் நகரத்தில் முதன்முதலாக பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு 1,113 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 44 ஆயிரத்து 113 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்திருந்தது. ஆனால், இந்த வைரஸ் நோய்க்கு பல ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாகவும், லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியானது.
ஆனால், கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கும் வுஹான் நகரைப் பற்றிய செய்திகள் எதுவும் ஆதாரத்துடன் வெளிவராமல் இருந்தது. இந்நிலையில், அரசுக்கு அஞ்சாமல் சமூக வலைதளங்களின் மூலம் உலகத்துக்கு சீனாவில் உள்ள நிலைமையை விளக்க ஆரம்பித்துள்ளனர். இதுபோன்று உண்மை பேசுபவர்கள் உடனடியாக மாயமாவதுதான் பேரதிர்ச்சியாக உள்ளது.
இதையும் படிங்க;- அதிமுக முன்னாள் அமைச்சர் திமுகவில் இணைகிறார்... அதிர்ச்சியில் ஓபிஎஸ், இபிஎஸ்..!
இந்நிலையில், சென் கியுஷி என்ற பத்திரிகையாளர், செல்போன் வழியாக, வுஹானின் உண்மை நிலையை சேகரித்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். குறிப்பாக, வைரஸ் பாதிப்பால் சக்கர நாற்காலியில் இறந்து கிடக்கும் குடும்பத்தினர். மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ஆட்களின்றி சிரமப்படுவது போன்ற காட்சிகளை ஆவணப்படுத்தினார்.
மேலும், வுஹான் நகரில் மக்கள் வெளியேற அனுமதி மறுக்கப்பட்டிருக்கும் மிகப்பெரிய குடியிருப்புகள், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களின் மனநிலை ஆகியவற்றை ஆவணப்படுத்தி அவற்றை டுவிட்டர், யூ டியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். இந்த ஆவணங்கள் வழியாகத் தான், வெளியுலகிற்கு வுஹான் நகரத்தின் உண்மை நிலை தெரிய வந்தது.
இதையும் படிங்க;- உல்லாசத்தின் போது காசு கேட்டதால் ஆத்திரத்தில் கொலை... கைதான சிறுவன் பகீர் வாக்குமூலம்..!
இதற்கு கண்டனம் தெரிவித்த சீன அரசு, 'மக்களை அச்சத்தில் ஆழ்த்தும்படியான செய்திகளையும் தகவல்களையும் யாரும் பரப்பக்கூடாது மீறினால் கடும் நடவடிக்கைக்கு எடுக்கப்படும் என சென் கியுஷிக்கு எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் தற்போது அவர் மாயமாகியுள்ளார்.