உல்லாசமாக இருக்க அதிக பணம் கேட்டதால் பெண்ணை கொடூரமாக கொலை செய்தேன் என கைதான சிறுவன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளது அதி்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

விழுப்புரத்தில் புதுச்சேரி செல்லும் சாலையில் தெற்கு ரயில்வே குடியிருப்பு உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதில் பல வீடுகள் பாழடைந்து, இடிந்து காணப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஜனவரி 15-ம் தேதி பாழடைந்த ஒரு வீட்டில் 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர், நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார். அவரது முகம் சிதைக்கப்பட்டு இருந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இளம்பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்து கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்த விவரம் தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

இதையும் படிங்க;-  ஆபாச வீடியோ பார்த்து அதே மாதிரி பண்ண சொன்ன மனைவி... காமவெறியால் பலரிடம் உல்லாசம்.. அதிர்ந்துபோன கணவர்..!

இந்நிலையில், ரயில் நிலையத்தை சுற்றியுள்ளவர்கள் தான் இக்கொலை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் கருதினர். இதனிடையே, ரயில் நிலையத்தில் டீ. வாட்டர் பாட்டல் போன்றவற்றை விற்பனை செய்யும் 17 வயது சிறுவனிடம் போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் அவர் கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளான். 

இதையும் படிங்க;- ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் இளம்பெண்களுடன் உல்லாசம்... முக்கிய புள்ளிகளுக்கு குறி வைத்த போலீஸ்..!

பின்னர், போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில்;-  நான் ரயில்நிலைய கேண்டீனில் வேலைசெய்து வருகிறேன். ரயில்நிலைய பிளாட்பாரத்தில் பிச்சை எடுக்கும் 30 வயது பெண் ஒருவர் தங்கியிருப்பார். இரவுநேரத்தில் பணம்கொடுத்து அவரை சிலர் உல்லாசத்திற்கு அழைத்து செல்வார்கள். அதைப்போலவே நானும், அப்பெண்ணுடன் உல்லாசமாக இருக்கலாம் என்று நினைத்தேன். அப்பெண்ணிடம் சென்று பணத்தை காண்பித்து, பாழடைந்த ரயில்வே குடியிருப்புக்கு அழைத்துச் சென்றேன். பின்னர், ஆடைகளை அவிழ்த்தநிலையில் பணத்தை கேட்டார். என்னிடமிருந்த 50 ரூபாயை எடுத்துக்கொடுத்தேன்.

ஆனால். வாங்கமறுத்து ரூ.500 கொடுக்கவேண்டுமென கூறி சண்டைபோட்டார். இவ்வளவு பணம் என்னிடமில்லை என்று கூறினேன். பணம் கொடுக்கவில்லை என்றால் இதுதொடர்பாக போலீசாரிடம் சொல்லிவிடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோய் அருகிலிருந்த கல்லைஎடுத்து முகத்தில் போட்டு கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றேன் என தெரிவித்துள்ளார். இதனையடுத்து, அந்த சிறுவனை கைது செய்து சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைத்தனர்.