அதிமுக முன்னாள் அமைச்சர் திமுகவில் இணைகிறார்... அதிர்ச்சியில் ஓபிஎஸ், இபிஎஸ்..!
ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் கடந்த 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை அமைச்சராக இருந்தவர் ராஜ கண்ணப்பன். முக்கிய அமைச்சராக இருந்த அவர், கருத்து வேறுபாடு காரணமாக அதிமுகவில் இருந்து விலகி கடந்த 2000-ம் ஆண்டு மக்கள் தமிழ் தேசம் எனும் பெயரில் தனிக்கட்சி தொடங்கினார். அதன் பிறகு 2006-ம் ஆண்டு திமுகவில் தனது கட்சியை இணைத்தார். 3 ஆண்டுகளுக்கு பிறகு 2009-ல் மீண்டும் அதிமுகவிற்கு தாவி தற்போது எந்த கட்சிக்கும் செல்லாமல் இருந்து வந்தார்.
அதிமுக தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான ராஜகண்ணப்பன் திமுகவில் இணைய முடிவு செய்துள்ளார். தனது ஆதரவாளர்களுடன் பிப்ரவரி 23-ம் தேதி மதுரையில் நடைபெறும் விழாவில் அவர் இணைகிறார்.
ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் கடந்த 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை அமைச்சராக இருந்தவர் ராஜ கண்ணப்பன். முக்கிய அமைச்சராக இருந்த அவர், கருத்து வேறுபாடு காரணமாக அதிமுகவில் இருந்து விலகி கடந்த 2000-ம் ஆண்டு மக்கள் தமிழ் தேசம் எனும் பெயரில் தனிக்கட்சி தொடங்கினார். அதன் பிறகு 2006-ம் ஆண்டு திமுகவில் தனது கட்சியை இணைத்தார். 3 ஆண்டுகளுக்கு பிறகு 2009-ல் மீண்டும் அதிமுகவிற்கு தாவி தற்போது எந்த கட்சிக்கும் செல்லாமல் இருந்து வந்தார்.
இதையும் படிங்க;- தமிழக விவசாயிகளுக்கு குட் நியூஸ்... முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பு..!
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின்போது எம்.பி. சீட் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் தொகுதிகளில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டதால் அதிமுகவில் இருந்து வெளியேறி திமுகவுக்கு ஆதரவு கொடுத்தார். இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ராஜகண்ணப்பன் திமுகவில் இணைய திட்டமிட்டுள்ளார். மதுரையில் நடைபெறும் பிரமாண்ட விழாவில் சுமார் பல்லாயிரக்கணக்கானோர் திமுகவில் இணை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.