பொறுத்து பொறுத்து பார்த்து கடுப்பான ஒபாமா..!! மரியாதையை தன்னால் கெடுத்துக்கொண்ட அதிபர் ட்ரம்ப்..!!

கொரோனா வைரஸை கண்காணிக்க தேசிய அளவில் ஒருமித்த திட்டம் இதுவரையிலும் வகுக்கப்படவில்லை ,  மாசாசூசெட்ஸ் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் சேர்ந்த மக்கள் தங்கள் சொந்த சுகாதார திட்டத்தை கையில் எடுத்துள்ளனர் .  

american ex president Obama  criticized  current president trump

நாட்டில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் அதை கட்டுப்படுத்த இதுவரையில் ஒரு ஒருங்கிணைந்த திட்டம் வகுக்கப்படவில்லை என்றும் நாட்டில் அதிக அளவில் பரிசோதனைகள் செய்ய போதுமான பரிசோதனை கருவிகள் இல்லை என்றும்  அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா , அதிபர் டொனால்ட் ட்ரம்பை மறைமுகமாக சாடியுள்ளார் .  அமெரிக்காவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் மாநில ஆளுநர்கள் முதல் எதிர்க்கட்சியினர் வரை ட்ரம்பை கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் ஒபாமாவும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் . கொரோனா வைரஸ் உலக முழுவதும் வேகமாக பரவி வருகிறது .  உலக அளவில் 25 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது .  இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து எட்டியுள்ளது .  அமெரிக்கா இத்தாலி ஸ்பெயின் ஜெர்மனி பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் இந்த வைரசால் மிக்க கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

american ex president Obama  criticized  current president trump 

ஆனாலும் எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு அமெரிக்காவை கொரோனா மிகத் கொடூரமாக தாக்கியுள்ளது. இதுவரையில்  அமெரிக்காவில் 8 லட்சத்து 86 ஆயிரத்து 250 பேருக்கு கொரோனா தோற்று பரவியுள்ளது ,  சுமார் 50 ஆயிரத்து 743 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர் .  ஆனால் வெறும் 86 ஆயிரத்து 922 பேர் மட்டுமே குணமடைந்துள்ளனர். இந்நிலையில் சுமார் 7 லட்சத்து 50 ஆயிரம் பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .  இன்னும் 14 ஆயிரத்து 996 பேர் வென்டிலேட்டர் உதவியுடன்  ஐசியூவில் உயிருக்கு  போராடி வருகின்றனர் .  இன்னும் அமெரிக்காவில் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் என்னும் நோய் தோற்றல் தொடரும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது .  

american ex president Obama  criticized  current president trump

இந்நிலையில் அமெரிக்காவின் போதுமான மருத்துவ வசதிகள் இல்லை என்றும் மருத்துவர்களுக்கு போதுமான பாதுகாப்பு உபகாரணங்கள் இல்லை என்றும் ,   தங்களுக்கான பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும் என அந்நாட்டில் மருத்துவர்கள் போராடி வருகின்றனர் 
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், கொரோனா விவகாரத்தில் மாநிலங்களை கலந்தாலோசிக்காமல் அனைத்து முடிவுகளையும் தன்னிச்சையாக எடுக்கிறார் ஒரு சர்வாதிகாரி போல நடந்து கொள்கிறார் என  மாநில ஆளுநர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர் . இந்நிலையில் முன்னாள் அதிபர் ஒபாமா இந்த விவகாரத்தில் மவுனம் காத்து வந்த நிலைகள் ,  தற்போது அவர் மறைமுகமாக அதிபர் டொனால்டு ட்ரம்பை சாடியுள்ளார் ,இது குறித்து டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள அவர்,     கொரோனா வைரஸை கண்காணிக்க தேசிய அளவில் ஒருமித்த திட்டம் இதுவரையிலும் வகுக்கப்படவில்லை

,  american ex president Obama  criticized  current president trump

மாசாசூசெட்ஸ் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் சேர்ந்த மக்கள் தங்கள் சொந்த சுகாதார திட்டத்தை கையில் எடுத்துள்ளனர் .  இன்னும் பல்வேறு மாநிலங்களில் முறையான பரிசோதனைகள் மேற்கொள்ள போதுமான பரிசோதனைக் கருவிகள் இல்லை .  மாநில அரசுகள் தங்கள் சொந்த நிதியிலிருந்து குரு நாவை எதிர்க்க களமிறங்கியுள்ளனர் .  அமெரிக்க பிரதிநிதிகள் சபை கொரோனா  ஒழிப்பிற்காக 484 பில்லியன் டாலருக்கு ஒப்புதல் அளித்துள்ளது ,  அதில் 25 பில்லியன் டாலர் நிதி பரிசோதனைக்காக மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது ,  தற்போது ஒதுக்கப்பட்டுள்ள நிதி போதாது இன்னும் பரிசோதனைகளை விரிவுபடுத்த வேண்டும் என அவர் எச்சரித்துள்ளார் . ஒபாமாவின் கருத்து அமெரிக்காவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios