ஆகஸ்டு மாதத்திற்குள் அமெரிக்காவில் நடக்க போகும் பேராபத்து.!! 40 ஆயிரம் பேரை மரண குழியில் தள்ளியது கொரோனா..!!
அதுமட்டுமின்றி 13 ஆயிரத்து 566 பேர் ஐசியுவில் வெண்டிலேட்டர் உதவியுடன் உயிருக்கு போராடி வருகின்றனர் . அமெரிக்காவில் கடந்த பிப்ரவரி 20 ஆம் தேதி வாக்கில் பரவத் தொடங்கிய இந்த கொரோனா வைரஸ் கடந்த ஒரு மாத காலத்தில் காட்டுத்தீ போல பரவி ஒட்டுமொத்த அமெரிக்காவையும் கபளிகரம் செய்துள்ளது .
அமெரிக்காவில் கொரோனாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை கடந்துள்ளது . இது அமெரிக்கர்களை மட்டுமல்லாது உலக காடுகளையும் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது . கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் ஹூபே மாகாணாம் வூஹானில் தோன்றிய கொரோனா வைரஸ் மெல்ல மெல்ல அமெரிக்கா ஐரோப்பா , ஆப்பிரிக்கா என சுமார் 120 க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ளது . ஆரம்பத்தில் சற்று நிதானமாக பரவிய இந்த வைரஸ் கடந்த ஒரு மாத காலமாக மின்னல் வேகத்தில் பரவி வருகிறது . இதுவரையில் உலக அளவில் 20 லட்சத்து 40 ஆயிரத்து 8148 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது . இதுவரை உலக அளவில் ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 105 பேர் உயிரிழந்துள்ளனர் . சுமார் 6 லட்சத்து 29 ஆயிரத்து 61 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர் .
ஆனாலும் வைரஸ் பரவலும் அதனால் ஏற்படும் பலி எண்ணிக்கையும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது . குறிப்பாக இத்தாலி , ஸ்பெயின் , அமெரிக்கா பிரான்ஸ் ஜெர்மனி , பிரிட்டன் , துருக்கி உள்ளிட்ட நாடுகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன இதுவரையில் எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு கொரோனா அமெரிக்காவில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது . கிட்டத்தட்ட அமெரிக்காவில் மட்டும் 7 லட்சத்து 64 ஆயிரத்து 265 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது . இதுவரை சுமார் 40 ஆயிரத்து 568 பேர் உயிரிழந்துள்ளனர் . ஆனால் வெரும் 71 ஆயிரத்து 356 பேர் மட்டுமே சிகிச்சை மூலம் குணமடைந்துள்ளனர் அதேநேரத்தில் 6 லட்சத்து 52 ஆயிரத்து 688 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் . அதுமட்டுமின்றி 13 ஆயிரத்து 566 பேர் ஐசியுவில் வெண்டிலேட்டர் உதவியுடன் உயிருக்கு போராடி வருகின்றனர் . அமெரிக்காவில் கடந்த பிப்ரவரி 20 ஆம் தேதி வாக்கில் பரவத் தொடங்கிய இந்த கொரோனா வைரஸ் கடந்த ஒரு மாத காலத்தில் காட்டுத்தீ போல பரவி மொத்த அமெரிக்காவையும் கபளிகரம் செய்துள்ளது .
நோய் தொற்றலும் பலி எண்ணிக்கையும் பன்மடங்காக உயர்ந்துள்ளது மற்ற எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு அமெரிக்கா இந்த வைரசால் மிகக் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் , ஆகஸ்ட் மாத இறுதிக்குள் அமெரிக்காவில் 81 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழக்க வாய்ப்பு உள்ளது எனவும் அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் சுகாதார அளவீட்டு நிறுவனம் எச்சரித்திருந்தது , தற்போது கொரோனா வைரஸ் அமெரிக்காவில் உச்ச கட்டத்தில் இருந்து வருவதால் , பலி எண்ணிக்கை நாளொன்றுக்கு 2000 முதல் 4 வரை உயர்ந்துள்ளது வருகிறது , அதே நேரத்தில் இந்த வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் வந்தாலும் பலி எண்ணிக்கை தொடரும் வாய்ப்புள்ளது எனவும் எச்சரிக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது . இதற்கிடையில் அமெரிக்கப் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளதுள்ள நிலையில் , மெல்ல மெல்ல ஊரடங்கை தளர்த்த அமெரிக்கா திட்டமிட்டு வரும் நிலையில் , ஊரடங்கை விரைந்து தளத்தை வேண்டுமென அமெரிக்காவில் ஆங்காங்கே மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளது குறிப்பிடத்தக்கது .