தீபாவளி கொண்டாட்டத்தில் அக்ஷதா மூர்த்தி அணிந்திருந்த கந்தபெருண்டா நெக்லஸ்.. அப்படி என்ன ஸ்பெஷல்?
இங்கிலாந்து முதல் பெண்மணியான அக்ஷதா மைசூரு புடவை மற்றும் நெக்லஸ் அணிந்திருந்தார், அதில் கர்நாடகாவின் மாநில சின்னமான "கண்டபெருண்டா" இடம்பெற்றிருந்தது,
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அவரின் மனைவி அக்ஷதா மூர்த்தி இருவரும் தங்களின் அதிகாரப்பூர்வ இல்லமான 10 டவுனிங் தெருவில் தீபாவளி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடப்ரான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த கொண்டாட்டத்தின் போது அக்ஷதா அணிந்திருந்த நகைகள் மற்றும் புடவை அனைவரையும் ஈர்த்துள்ளது.
இங்கிலாந்து முதல் பெண்மணியான அக்ஷதா மைசூரு புடவை மற்றும் நெக்லஸ் அணிந்திருந்தார், அதில் கர்நாடகாவின் மாநில சின்னமான "கண்டபெருண்டா" இடம்பெற்றிருந்தது, இன்போசிஸ் நிறுவனரான நாராயண மூர்த்தியின் மகள் தான் அக்ஷாதா என்பது அனைவரும் அறிந்தது. இந்த நிலையில் தனது சொந்த மாநிலமான கர்நாடகவிற்கு பெருமை சேர்க்கும் விதமாக அவர் அணிந்திருந்த நெக்லஸ் உலகளவில் கவனம் ஈர்த்துள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
"கந்தபெருண்டா" பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள்
"கந்தபெருண்டா" அல்லது "பேருண்டா" என்பது இந்து புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது இரண்டு தலைகள் கொண்ட பறவையாகும், இது விஷ்ணுவின் வடிவமாகக் கருதப்படுகிறது. இது கர்நாடகாவில் உள்ள மைசூருவுடன் ஆழமான வரலாற்று தொடர்பைக் கொண்டுள்ளது. 500 ஆண்டுகளுக்கு மேலாக கந்த பெருண்டா மைசூர் வரலாற்றில் இடம்பெற்றுள்ளது. இந்து புராணங்களில், கந்தபெருண்டா விஜயநகரப் பேரரசில் சின்னமாக பயன்படுத்தப்பட்டது. பின்னர் அது மைசூர் இராஜ்ஜியத்தின் சின்னமாக தேர்ந்தெடுக்கப்பட்டது.
வரலாற்றாசிரியர் பி.வி. நஞ்சராஜே உர்ஸின் கூற்றுப்படி, கந்தபெருண்டா முதன்முதலில் விஜயநகர நாணயங்களில் அடையாளமாக பயன்படுத்தப்பட்டது, இன்னும் பல நாணயங்கள் உள்ளன. புராணங்களின்படி, விஷ்ணு தனது பக்தரான பிரஹலாதனின் தந்தையான ஹிரண்யகசிபுவை கொல்ல நரசிம்ம அவதாரத்தை ஏற்றுக்கொண்டார். ஆனால் ஹிரண்யகஷ்யப் இறந்த பிறகும் அவரது கோபம் தணியவில்லை. இது அனைத்து தேவர்களையும் பயமுறுத்தியது. எனவே விஷ்ணுவின் கோபத்தை குறைக்க வேண்டும் என்று சிவபெருமானிடம் வேண்டினர்.
அதன்படி, நரசிம்மரை அமைதிப்படுத்த சிவபெருமான் சரபா (யானைத்தலை சிங்கம்) வடிவில் வந்தார், ஆனால் இதனால் மேலும் கோபமடைந்த விஷ்ணு, பெரிய இறகுகள் மற்றும் இரண்டு தலைகள் கொண்ட ஒரு பறவையின் கந்தபெருண்டாவின் வடிவத்தை எடுக்க வேண்டியிருந்தது. இரண்டு தலைகள் கொண்ட பறவை அபரிமிதமான மந்திர சக்தியைக் கொண்டது என்று நம்பப்படுகிறது. மேலும் நாடு முழுவதும் உள்ள ஏராளமான கோயில் சிற்பங்களில் இந்த பறவை காணப்படுகிறது.
கூகுளில் தீபாவளி பற்றி அதிகம் தேடப்பட்ட 5 கேள்விகள் இவைதான்.. சுந்தர் பிச்சை சொன்ன தகவல்..
வரலாற்று ரீதியாக, மைசூரின் முதல் மன்னரான யதுராய உடையார் -- தனது பதவியை பலப்படுத்த ஒரு வெற்றி அணிவகுப்பை மேற்கொண்டார். "யாத்திரையின் போது, ஒரு துறவி சந்தித்து அவருக்கு ஒரு சிவப்பு துணியைக் கொடுத்தார். மன்னர் அதற்கு பூஜை செய்து அதை ஆசீர்வாதமாக ஏற்றுக்கொண்டார். அதன்பிறகு அவர் அனைவரின் பாராட்டையும் பெற்றார்" என்று வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
யதுராயருக்குக் கொடுக்கப்பட்ட சிவப்புத் துணியானது மாநிலக் கொடியாக அவரது மக்களுக்கு வழங்கப்பட்டது. பின்னர் அவர் கொடியில் கந்தபெருண்டா உருவத்துடன் தர்மம் மற்றும் உண்மை கொள்கைகளை குறிக்கும் 'சதிமேவோத்பவரம்யஹம்' என்ற ஸ்லோகம் சேர்க்கப்பட்டது.
சுதந்திரத்திற்குப் பிறகு, மைசூர் கொடியை அதன் மாநில சின்னமாக தொடர்ந்து பயன்படுத்தியது, அது கர்நாடகாவின் ஒரு பகுதியாக மாறியதும், கந்தபெருண்டா மாநிலத்தின் அதிகாரப்பூர்வ சின்னமாக மாறியது. தற்போது, இது கர்நாடக அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ சின்னமாக உள்ளது, மேலும் மாநிலத்தின் இரு அவைகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் 10 அமர்வுகளில் கலந்து கொள்ளும்போது கந்தபெருண்டாவை சித்தரிக்கும் தங்க-பூசப்பட்ட உலோக பதக்கங்களை அணிகின்றனர். இது இந்திய இராணுவத்தின் 61 வது குதிரைப்படையின் அடையாளமாகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.