கூகுளில் தீபாவளி பற்றி அதிகம் தேடப்பட்ட 5 கேள்விகள் இவைதான்.. சுந்தர் பிச்சை சொன்ன தகவல்..
தீபாவளி பண்டிகை பற்றி கூகுளில் தேடப்பட்ட சுவாரஸ்ய தகவல்களை சுந்தர் பிச்சை வழங்கி உள்ளார்.
நாட்டின் மிக முக்கிய பண்டிகையான தீபாவளி கொண்டாங்கள் முடிந்துவிட்ட நிலையில், கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை தீபாவளி பண்டிகை பற்றி கூகுளில் தேடப்பட்ட சுவாரஸ்ய தகவல்களை வழங்கி உள்ளார். இதுகுறித்து தனது X வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தனது தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் தீபாவளி தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விகள் கொண்ட விளக்கப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.
அதில் 'இந்தியர்கள் ஏன் தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள்?' என்ற கேள்வி கூகுள் தேடலில் முதலிடத்தில் இருந்தது, அதைத் தொடர்ந்து 'தீபாவளி அன்று நாம் ஏன் ரங்கோலி செய்கிறோம்,' 'தீபாவளி அன்று நாம் ஏன் விளக்குகளை ஏற்றுகிறோம், ' 'தீபாவளி அன்று லக்ஷ்மி பூஜை ஏன் செய்யப்படுகிறது,' இறுதியாக, 'தீபாவளி அன்று ஏன் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் ' என்ற 5 கேள்விகள் தான் தீபாவளி தொடர்பாக கூகுளில் அதிகம் தேடப்பட்ட கேள்விகள் ஆகும்.
சுந்தர் பிச்சையின் இந்த பதிவிற்குப் பதிலளிக்கும் விதமாக, பலரும் அவருக்கு தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்தனர். முன்னதாக, ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக்கும் தீபாவளியை முன்னிட்டு இந்தியர்களுக்கு X-ல் வாழ்த்து தெரிவித்தார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இந்தியா மற்றும் உலகின் பல பகுதிகளிலும் உற்சாகத்துடன் கொண்டாடப்படும் தீபாவளி, நவம்பர் 12, 2023 அன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. தீபங்களின் திருவிழா" என்று குறிப்பிடப்படும் தீபாவளி இரவு வானத்தை மட்டுமல்ல, நம் இதயங்களையும் ஒளிரச் செய்கிறது, மகிழ்ச்சி, செல்வம், செழிப்பு மற்றும் அரவணைப்பு ஆகியவற்றையும் குறிக்கிறது.
இந்தியாவின் பண்டைய நூல்களில் தீபாவளி பற்றிய குறிப்புகள் உள்ளன. ராவணனை வீழ்த்தி ராமர் தனது ராஜ்ஜியமான அயோத்திக்கு திரும்பிய நாள் தான் தீபாவளி என்று நம்பப்படுகிறது. அவர் திரும்பியதால் மகிழ்ச்சியடைந்த அயோத்தி மக்கள், அவரது பாதையை ஒளிரச் செய்ய விளக்குகளை ஏற்றி அவரை வரவேற்றதாகவும், அதன்பிறகே தீபாவளியின் போது விளக்குகளை ஏற்றும் பாரம்பரிம் பின்பற்றப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இருள் அழிந்து ஒளி பிறப்பதையும், தீமை அழிந்து நன்மை பிறப்பதையும் குறிக்கும் தீபாவளிக்கு ஆழ்ந்த முக்கியத்துவம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.