Asianet News TamilAsianet News Tamil

9/11 தாக்குதல், கோவிட் பெருந்தோற்றுக்கு பிறகு.. பாபா வங்காவின் 3-ம் உலகப்போர் கணிப்பு உண்மையாகிறதா?

இஸ்ரேல் - ஈரான் இடையே பதற்றம் நீடித்து வரும் நிலையில் பாபா வங்காவின் 3-ம் உலகப்போர் கணிப்பு உண்மையாகி வருகிறதா என்ற அச்சம் எழுந்துள்ளது

After 9/11 and pandemic, is Baba Vanga's prediction of world war 3 coming true with Iran-Israel tensions? Rya
Author
First Published Apr 18, 2024, 9:13 AM IST

பல்கேரியாவை சேர்ந்த பிரபல தீர்க்கதரிசி பாபா வங்கா, எதிர்காலத்தை பற்றிய தனது துல்லியமான கணிப்புகளுக்காக பிரபலமானவர். பால்கனின் நாஸ்ட்ராடாமஸ் என்று அழைக்கப்படும் பாபா வங்கா, அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் மீதான பயங்கரவாதத் தாக்குதல், செர்னோபில் விபத்து, இளவரசி டயானாவின் மரணம், ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறியது, 2004 சுனாமி போன்ற முக்கிய நிகழ்வுகளை துல்லியமாக கணித்தவர். மேலும் கோவிட் பெருந்தொற்று, உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் குறித்தும் அவர் கணித்திருந்தார். 

பல நிகழ்வுகளை சரியாகக் கணித்த பிரபல தீர்க்கதரிசி பாபா வங்கா, 2024இல் மூன்றாம் உலகப் போரைப் பற்றியும் கணித்திருந்தார். 2024 ஆம் ஆண்டில், உயிரியல் தாக்குதல்கள், ஐரோப்பாவில் பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் 3 ஆம் உலகப் போர் போன்ற பல பயங்கரமான நிகழ்வுகள் நடக்கும் என்று அவர் கணித்திருந்தார்.

மீண்டும் தெற்கு ஜப்பானை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்! ரிக்டர் அளவில் 6.4 ஆகப் பதிவு!

இந்த நிலையில் பாபா வங்காவின் மற்றொரு கணிப்பு உண்மையாகி வருகிறதா என்ற அச்சம் எழுந்துள்ளது. கடந்த வாரம். இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தி உள்ள நிலையில், பாபா வங்காவின் அடுத்த உலகப் போரின் கணிப்புகள் பலரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. ஈரான் கிட்டத்தட்ட 300 ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை இஸ்ரேல் மீது ஏவி தாக்குதல் நடத்தியது. இதனால் இஸ்ரேல் - ஈரான் இடையே பதற்றம் நீடித்து வருகிறது. மறுபுறம் ஈரானுக்கு எதிராக புதிய தடைகளை அறிவிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது, பிற நட்பு நாடுகளும் அமெரிக்காவின் பாதையை பின்பற்றும் என்று தெரிகிறது.

இஸ்ரேலுக்கு எதிரான ஈரானின் இந்த நடவடிக்கையால் மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள பதற்றம், உலகளவில் கவலைகளை அதிகப்படுத்தியுள்ளது. ஈரான் தற்கொலை ட்ரோன்கள், ஏவுகணைகள் மற்றும் ராக்கெட்டுகளை நிலைநிறுத்துவது ஒரு பெரிய மோதலுக்கான அச்சத்தை தூண்டி உள்ளது. இது சமூக ஊடக தளங்களில் 3 ஆம் உலகப் போரின் சாத்தியக்கூறு பற்றிய விவாதங்களை தூண்டி உள்ளது. சிரியாவின் டமாஸ்கஸில் உள்ள ஈரானிய துணைத் தூதரகத்தின் மீது ஏப்ரல் 1 அன்று நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலுக்கு பதிலடியாக இந்த பதிலடி நடத்தப்பட்டது. இது முன்னெப்போதும் இல்லாத பழிவாங்கும் செயலாக பார்க்கப்படுகிறது. இதனால் மூன்றாம உலகப் போர் ஏற்பட வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது. 

Israel : இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை.. அங்குள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட அவசர உதவி எண்கள்! முழு விவரம்!

யார் இந்த பாபா வாங்கா

பாபா வங்கா 1911 இல் வடக்கு மாசிடோனியாவில் பிறந்தார். இருப்பினும், அவர் தனது வாழ்நாளின் பெரும்பகுதியை பல்கேரியாவில் வாழ்ந்தார். இவரது இயற்பெயர் வாங்கெலியா பாண்டேவா குஷ்டரோவா. எதிர்காலத்தை கணிக்கும் தீர்க்கதரிசனம் மற்றும் இறந்தவர்களுடன் தொடர்பு கொள்ளும் திறனுக்காக அவர் புகழ் பெற்றார். பாபா வங்கா, தனது 12-வது வயதில் மிகப்பெரிய புயலில் சிக்கி, தனது பார்வையை இழந்தார். எனினும் அதன்பிறகு அவர், எதிர்காலத்தை பற்றி கணிக்க தொடங்கினார். அவரின் பல கணிப்புகள் உண்மையானதால் அவை மிகவும் நம்பிக்கைக்குரியவையாக பார்க்கப்படுகின்றன. 

Follow Us:
Download App:
  • android
  • ios