Israel : இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை.. அங்குள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட அவசர உதவி எண்கள்! முழு விவரம்!
Help Line Numbers : சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸில் உள்ள ஈரான் நாட்டு தூதரகம் மீது, கடந்த வாரம் இஸ்ரேல் படைகள் அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில் முக்கிய தலைவர்கள் சிலர் கொல்லப்பட்டனர். இதனைத்தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேல் மீது ஈரான் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை நடத்திய பிறகு, இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில, பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் அபாயம் இருப்பதாக இந்தியா அறிவித்துள்ளது. அதே போல இஸ்ரேலில் உள்ள இந்தியத் தூதரகம், இன்று வெளியிட்ட அறிக்கையில், இந்திய குடிமக்கள் அமைதியாக இருக்க கேட்டுக்கொண்டுள்ளது.
உள்ளூர் அதிகாரிகளால் வழங்கப்பட்ட பாதுகாப்பு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்கவும் அது வலியுறுத்துகிறது. மேலும், "இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம், நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது என்றும், மேலும் எங்கள் நாட்டவர்கள் அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக இஸ்ரேலிய அதிகாரிகள் மற்றும் இந்திய சமூக உறுப்பினர்களுடன் தொடர்பில் உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது"
மேலும் இந்திய வெளியுறவு அமைச்சகம் (MEA) ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது. அதில் உடனடியாக தீவிரத்தை குறைக்க அழைப்பு விடுத்துள்ளது மற்றும் அனைத்து தரப்பினரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. ஏற்கனவே இந்தியர்கள் ஈரான் மற்றும் இஸ்ரேல் செல்வதை தவிர்க்குமாறு இந்திய வெளியுறவு அமைச்சகம் கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
"இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையேயான பகைமை அதிகரித்து வருவதால், பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுவது குறித்து நாங்கள் தீவிரமாக கவலைப்படுகிறோம்" என்று வெளியுறவு அமைச்சகம் செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது. "விரோதங்களை உடனடியாக நிறுத்தவும், விவேகத்தைப் பயன்படுத்தவும், ஆக்கிரமிப்பிலிருந்து பின்வாங்கவும், இராஜதந்திர உறவுகளை மீட்டெடுக்கவும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்" என்றும் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
மேலும், ஈரான்-இஸ்ரேல் மோதலின் நிலைமையை அவர்கள் உன்னிப்பாக கவனித்து வருவதாக MEA உறுதிப்படுத்தியது. "வளர்ந்து வரும் சூழ்நிலையை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். பிராந்தியத்தில் உள்ள எங்கள் தூதரகங்கள் இந்திய சமூகத்துடன் நெருங்கிய தொடர்பில் உள்ளன. பிராந்தியத்தில் பாதுகாப்பு பராமரிக்கப்படுவது இன்றியமையாதது" என்று MEA மேலும் கூறிய
ஈரானிய தாக்குதல் பிராந்தியத்தில் பதட்டத்தை அதிகரிக்கும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் பாதுகாப்பு அமைச்சரவை மற்றும் போர் அமைச்சரவையுடனான சந்திப்புகளைத் தொடர்ந்து இஸ்ரேலிய பிரதமருடன் நடத்தி வருகின்றார்.