மெக்சிகோவில் கொடூரம்... பாலத்தில் தொங்கிய சடலங்கள்... வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!

மெக்சிகோவில் கடந்த 2006ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை போதை பொருள் கடத்தல் கும்பல்களுக்கு இடையேயான மோதல் உச்சகட்டத்தில் இருந்த வந்தது. உச்சகட்டத்தில் இருந்தது. தங்களுக்கு போட்டியாக செயல்படும் எதிர்தரப்பினருக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், அவர்களை கொன்று சாலையோரத்தில் உடல்கள் குவிக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. 

A Mexican gang hung 9 dead bodies from a bridge

மெக்சிகோவில் பாலம் ஒன்றில் 6 பேரின் உடல்கள் கட்டித் தொங்கவிடப்பட்டு இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மெக்சிகோவில் கடந்த 2006ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை போதை பொருள் கடத்தல் கும்பல்களுக்கு இடையேயான மோதல் உச்சகட்டத்தில் இருந்த வந்தது. உச்சகட்டத்தில் இருந்தது. தங்களுக்கு போட்டியாக செயல்படும் எதிர்தரப்பினருக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், அவர்களை கொன்று சாலையோரத்தில் உடல்கள் குவிக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. A Mexican gang hung 9 dead bodies from a bridge

தற்போது, இதுபோன்ற சம்பவம் மெக்சிகோவின் மிக்கோகன் மாநிலத்தின் உருவாபன் என்ற நகரில் நடந்துள்ளது. இங்குள்ள பாலத்தில் 9 பேரின் சடலங்கள்  கட்டித் தொங்க விடப்பட்டு இருந்தன. இதன் அருகே, சாலையோரத்தில் 10 பேரின் உடல்கள் குவித்து வைக்கப்பட்டு இருந்தன. சிலர் துப்பாக்கியால் சுடப்பட்டும், சிலர் தூக்கில் தொங்கவிடப்பட்டும், சிலர் அரை நிர்வாண நிலையிலும் கொல்லப்பட்டு இருந்தனர். இந்த உடல்களுக்கு அருகே இருந்த பேனரில் ‘ஜலிஸ்கோ’ என்ற போதை பொருள் கடத்தல் கும்பலின் தொடக்க எழுத்துக்கள் மட்டும் எழுதப்பட்டிருந்தன. A Mexican gang hung 9 dead bodies from a bridge

இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொடூர கொலை தொடர்பாக போலீசார் தரப்பில் கூறுகையில் இது ‘வயாகரா’ என்ற மற்றொரு கும்பலுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் இந்த கொலைகள் நடைபெற்றுள்ளது. இந்த தாக்குதல்கள் சற்று ஓய்திருந்த நிலையில் தற்போது அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios