காதலியின் மூளையை வறுத்து உண்ட வாலிபர்..! பிசாசு வருமா என காத்திருந்த பயங்கர நிகழ்வு ..!

ரஷ்யாவை சேர்ந்த 21 வயதான இளைஞர் தன்னுடைய காதலியை கொன்று, அவருடைய மூளையை வறுத்து உண்டுள்ள சம்பவம் உலக  அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சீரியல் கில்லர்கள் குறித்து அதிகம் படித்து வந்த டிமிரிட்டி என்ற ரஷ்ய  நாட்டை சேர்ந்த இளைஞர், மனிதர்களை கொல்வது, காவு கொடுப்பது போன்ற விவரம் அடங்கிய புத்தகத்தை அதிகம் வாசிக்கும் பண்பு கொண்டவர்.

1978 லிருந்து 1991க்கு இடைப்பட்ட ஆண்டுகளில் 17 சிறுவர்கள் மற்றும் பல ஆண்களை பயங்கரமாக அடித்து கொலை செய்து சமைத்து தின்ற மில்வாக்கே கேனிபல் ஜெப்ரி லையனல் டஹ்மர் பற்றி  இணையதளத்தில் அதிகம் படித்து வந்து உள்ளார்.

இந்நிலையில், இந்த நபரின் அனைத்து பண்புகளும் அவருக்கு  அப்படியே வந்து உள்ளது. இந்நிலையில் ரஷ்ய வாலிபர் டிமிரிட்டி 45 வயதான ஒலாகா புடுனோவா என்பவரை காதல் செய்து வந்து உள்ளார் .

இவரை தன் வீட்டிற்கு அழைத்து, அவரை பீர் பாட்டிலால் கடுமையாக  தாக்கி கொலை செய்து உள்ளார்

பின்னர் தலையை தனியாக எடுத்து மண்டையை பிளந்து  மூளையை தனியாக எடுத்து உள்ளார்.

அப்போது தன் வீட்டு சுவரில், பிசாசு உருவத்தை வரைந்து பேய் வருகிறதா என காத்து கொண்டிருந்துள்ளார்.

ஒரு குறிப்பிட்ட நேரம் வரை காத்திருந்த இந்த நபர், பேய் வராததை  அடுத்து, மூளையின் சிறு பகுதியை எடுத்து சமைத்து உண்டுள்ளார். இதன் சுவை அவருக்கு அதிகம் பிடித்துப்போகவே, மூளையை முற்றிலும் வறுத்து தின்று உள்ளான்.

இந்த சம்பவத்தை அடுத்து இந்த நபரை கைது செய்துள்ள போலீசார், கோர்ட் முன் நிறுத்தினர். இவருக்கு தற்போது ஆயுள் தண்டனை விதித்து சிறையில் அடைத்து உள்ளனர்.